BJP in Tamilnadu : பாஜகவை விட அதிக இடங்களில் டெபாசிட் இழந்த நாம்தமிழர்..தேர்தல் அலசல்!
ABP NADU
Updated at:
02 Mar 2022 06:24 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppBJP in Tamilnadu : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சிகளில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 915 இடங்களில் 1 இடம் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை இழந்துள்ளது. அதேபோல் 20 மாநகராட்சிகளில் பாஜக போட்டியிட்ட 935 இடங்களில் 822 இடங்களில் டெபாசிட் தொகையை இழந்துள்ளது. மேலும் மாநகராட்சிகள் மத்திய மாவட்டங்களில் திமுக அதிக வாக்கு சதவிகிதத்தை பெற்றுள்ளது. அதிமுக மேற்கு மாவட்டங்களில் அதிக வாக்கு சதவிகிதத்தை பெற்றுள்ளது. பாஜக தெற்கு பகுதிகளில் அதிக வாக்கு சதவிகிதத்தை பதிவு செய்துள்ளது.