World War 3? இப்படிதான் ஆரம்பித்தது இரண்டாம் உலகப்போர்

Continues below advertisement

World War 3? : உக்ரைன் நாட்டில் கடந்த 6 நாட்களாக ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டின் தலைநகர் கிவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் ஆகியவற்றில் ரஷ்ய படைகள் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன்காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. மேலும் பல முக்கிய நகரங்களில் அவ்வப்போது தொடர்ந்து குண்டுகள் விழும் சத்தமும் கேட்டு வருகிறது. பல இடங்களில் சேதமும் ஏற்பட்டுள்ளது. அங்கு 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டின் வான்வெளியில் விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram