NEET Thiruvarur student : அரசுப்பள்ளி, விவசாயி மகன்! NEET-ல் சாதித்த மாணவர்! நெகிழ்ச்சி சம்பவம்

Continues below advertisement

திருவாரூரில் அரசுப் பள்ளியில் படித்த விவசாயியின் மகன் நீட் தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் கலைச்செல்வி தம்பதியினரின் மகன் ஹரிஹரன். ஹரிகரனின் தந்தை சிவக்குமார் விவசாயம் செய்து வருகிறார். அவரது தாய் இல்லத்தரசி. கடந்த 2022-23ஆம் கல்வியாண்டில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று 600 க்கு 533 மதிப்பெண் எடுத்துள்ளார் ஹரிகரன். 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த ஹரிஹரன், தனது கிராமத்தில் அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாததை பார்த்து சிறுவயது முதலே மருத்துவராக வேண்டும் என நினைத்துள்ளார்.

இந்த நிலையில் 12 ஆம் வகுப்பை முடித்தவுடன் அவர் நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதியுள்ளார். அதில் 145 மதிப்பெண்கள் எடுத்து அவர் வெற்றி பெற்ற போதிலும் அவருக்கு மருத்துவ கல்லூரியில் சேர இடம் கிடைக்கவில்லை. இருப்பினும் மனம் தளராத ஹரிஹரன் மீண்டும் நீட் தேர்வை ஆங்கில வழியில் எழுத முடிவு செய்து நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வை ஹரிகரன் ஆங்கில வழியிலேயே எதிர்கொண்டுள்ளார். அதில் அவர் 720க்கு 494 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார். இதன் காரணமாக தற்போது அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தனக்கு மருத்துவராகும் வாய்ப்பு கிடைக்குமென அவர் உறுதியாக நம்பி காத்துக்கொண்டிருக்கிறார்.

இது குறித்து மாணவன் ஹரிஹரன் கூறும் போது, என்னை போன்றே அனைத்து அரசு பள்ளி மாணவ மாணவிகளும் தன்னம்பிக்கை இருந்தால் கண்டிப்பாக நீட் தேர்வில் வெற்றி பெறலாம் என்று தெரிவித்தார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram