PM Modi 3.0 Cabinet : அதிக பலத்துடன் அமைச்சரவை! அரசு பலம் இழந்ததா? காரசார விவாதம்

Continues below advertisement

2014ல் 46ஆக இருந்த பிரதமர் மோடியின் அமைச்சரவை பலம் இன்று 72 ஆக உயர்ந்துள்ளது. அரசாங்கம் வலுவிழந்து கொண்டே செல்வதால்தான் அமைச்சரவை பலம் கூடிக் கொண்டே இருக்கிறதா என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இறுதியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மோடி நேற்று பிரதமராக பதவியேற்றார். அவருடன் சேர்த்து மொத்தம் 72 அமைச்சர்கள் பதவியேற்றனர். பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சியமைத்துள்ள நிலையில் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2014ல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக முதல்முறையாக பதவியேற்ற போது 46 அமைச்சர்கள் இருந்தனர். அதில் 24 கேபினட் அமைச்சர்களும், 10 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களும், 12 இணையமைச்சர்களும் இருந்தனர்.

2019ல் இரண்டாவது முறையாக பதவியேற்ற போது அமைச்சரவை எண்ணிக்கை 58 ஆக அதிகரித்தது. இதில் 24 கேபினட் அமைச்சர்கள், 9 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 25 பேர் இணையமைச்சர்கள்.

ஆனால் இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் போதே 72 அமைச்சர்களுடன் ஆரம்பித்துள்ளது. இதில் 31 பேர் கேபினட் அமைச்சர்கள், 5 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், 36 பேர் இணையமைச்சர்கள். அமைச்சரவையில் பிரதமருடன் சேர்த்து மொத்தம் 81 பேர் மட்டுமே இருக்க முடியும். அதாவது மொத்த உறுப்பினர்களில் 15% மட்டுமே அமைச்சரவை பதவி.

மற்ற 2 முறையும் குறைவான அமைச்சரவையுடன் ஆரம்பித்த பாஜக இந்த முறை ஆரம்பமே 72 அமைச்சர்களுடன் இறங்கியுள்ளது. அரசின் செயல்பாடுகள் வலுவிழந்து விட்டதால்தான் அதனை ஈடுகட்ட பாஜக அதிக அமைச்சர்களை இறக்கியுள்ளதா என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறைவான அமைச்சர்களுடன் சிறப்பாக பணியாற்றிய முடியும் அசுர பலத்துடன் முதல்முறையாக ஆட்சியமைத்த பாஜக, இந்த முறை அதிகமான அமைச்சர்களை இறக்கியுள்ளது ஏன் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த முறை கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதால், அவர்களுக்கும் ஏற்றவாறு அமைச்சரவையை தயார் செய்ய வேண்டும் என்பதற்காக 72 அமைச்சர்கள் பதவியேற்றிருக்க வாய்ப்பிருப்பதாக பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram