Thirupattur Crime | கருக்கலைப்பு செய்யும் வேலை! போலீசுக்கு ரகசிய தகவல்! தேடுதல் வேட்டை தீவிரம்
கருவில் இருக்கும் குழந்தையை பாலினம் அறிந்து கருக்கலைப்பு செய்ய திட்டம் போட்ட 5 பேர் மீது 2 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தையை பாலினம் அறிந்து கருவில் இருக்கும் குழந்தையை அழிக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஸ்கேன்டெக்னீசியன் மணிவண்ணன், திருப்பத்தூர் சாமநகர் பகுதியை சேர்ந்த சுகுமார், பூங்குளம் பகுதியைச் சேர்ந்த புரோக்கர்கள் திமுக வார்டு உறுப்பினர் கவிதா,அதே பகுதியை சேர்ந்த இளவரசி கருகலைப்பு செய்யும் சேலம், நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்த கனகா ஆகியோர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இவர்கள் மீது சட்டவிரோதமாக கரு கலைப்பது, கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிதல் ஆகிய 2 தண்டனைச் சட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குருசிலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவான ஸ்கேன் டெக்னீசியன் சுகுமார் மற்றும் கருகலைப்பு கனகாவையும் போலீசார் தேடி வருகின்றனர்.