Salem Tea Shop CCTV | ஓசியில் மிக்சர் கேட்டு அடாவடி! டீகடையை சூறையாடிய கும்பல்! வெளியான CCTV காட்சி
ஓசியில் மிக்சர் தர மறுத்ததால் டீ கடையில் இளைஞர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கே.வி.பி.தியேட்டர் அருகில் வடிவேல் என்பவர் டீ கடை ஒன்றை நடத்தி வருகிறார். இச்சூழலில் அதே பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சம்பவத்தன்று டீ கடைக்கு வந்துள்ளனர். அப்போது “ உங்கள் கடையில் மிக்சர் நல்லா இருக்கும்னு சொல்றாங்க..50 கிராம் சேம்பில் குடுங்க” என்று கேட்டுள்ளனர்.
இதனை பார்த்த டீ கடையில் கேஷியராக வேலை செய்யும் ராஜ் குட்டி என்பவர் , 50 கிராம் லாம் சேம்பிள் கொடுக்க முடியாது. காசு கொடுத்து மிக்சர் வாங்கிக்கோங்க”என்ரு கரராகா கூறியுள்ளார். அதே போல் ”குறிப்பிட்ட அந்த இளைஞர்கள் கடைக்கு ஒவ்வொரு முறை வரும் போதும் தனது முதலாளி வடிவேலுவிடம் இதே டெக்னிக்கை பாலோ பண்ணி மிக்சர் வாங்கி சாப்பிடுகிறார்கள்”என்றும் தெரிவித்துள்ளார்.
தினம் தினம் ஓசியில் மிக்சர் கிடைத்தது இன்று மிக்சர் கிடைக்கவில்லையே என்று கடுப்பான அந்த இளைஞர்கள் கல்லாவில் நின்று கொண்டிருந்த கேசியரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், சேம்பிளாக ஓசியில் மிக்சர் கேட்ட குருப்பில் உள்ள ஒருவர் கடையில் ஒருந்த லட்டு மற்றும் கண்ணாடி பாட்டில்களை பிடிங்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையேல் வாக்குவாதம் முற்றி இருதரப்பும் மாறி மாறி ஆபாச வார்த்தைகளில் திட்டுக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதனைத்தொடர்ந்து கடையில் இருந்தவர்கள் இருதரப்பையும் சமாதான முயற்சி செய்தும் முடியவில்லை.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் டீ கடையில் தகறாரில் ஈடுபட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.