Thirumavalavan Meet Buddhist : தேம்பி அழுத புத்த பிட்சு..கண்ணீரை துடைத்த திருமா”தைரியமா இருங்க ஐயா”

தேம்பி அழுத புத்த பிட்சு..கண்ணீரை துடைத்த திருமா”தைரியமா இருங்க ஐயா”

புத்த பிட்சு ஒருவர் கண்ணீர் விட்டு அழுத நிலையில் அவர் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறியுள்ளார் திருமாவளவன்.

10 வருடமா புத்த சேவைக்கு வந்துட்டனால குடும்பத்தினரும் கைவிட்டுட்டாங்க இப்ப உடல்நலம் சரியில்லாம கஷ்டப்படுறேன் எனக்கூறி புத்த பிட்சு ஒருவர் கண்ணீர் விட்டு அழுத நிலையில் அவர் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறியுள்ளார் திருமாவளவன்.

கள்ளக்குறிச்சியில் நடைபெற இருக்கும் மது ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்து, வேலூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேலூர் வந்த திருமாவளவன், விருதம்பட்டை சேர்ந்த புத்த பிட்சு நாகராஜன் என்பவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்து அவரை நேரில் பார்க்க சென்றார்.

அப்போது ‘’கடந்த 10 ஆண்டுகளாக புத்த  சேவைக்கு சென்றதால் தன்னை குடும்பத்தினர் கைவிட்டதாக கூறி நாகராஜன் தேம்பி அழுதுள்ளார். இதையடுத்து புத்த பிட்சுவின் கண்ணீர் துடைத்து ஆறுதல் கூறினார். மேலும் அவருக்கு பண உதவியும் செய்து உதவினார் திருமா

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola