Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்
நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் பல்வேறு உள்ளூர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.
படிக்கட்டு உடைந்த ஆபத்தான நிலையில் பேருந்தை இயக்கி பயணிகளின் உயிரோடு தமிழக அரசு விளையாடுகிறது என பாயணிகள் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் பல்வேறு உள்ளூர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் காடாம்புலூர் வழியாக பண்ருட்டிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்தில் பின்பக்க படிக்கட்டு உடைந்து தொங்கிய நிலையில் நின்று கொண்டிருந்தது பேருந்து புறப்பட தயாரான பொழுது பயணிகள் பின்பக்கப்படிக்கட்டில் ஏற முயன்றனர்.
அப்பொழுது பேருந்து நடத்துனர் பயணிகளை பின்பக்க படிக்கட்டில் ஏற விடாமல் முன்பக்க படிக்கட்டில் ஏறுமாறு கூறியுள்ளார். இதை அடுத்து பயணிகள் முன்பக்க படிக்கட்டுகள் வழியாகவே ஏறி இறங்கி வருகின்றனர் படிக்கட்டு உடைந்த நிலையிலும் பேருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக எடுத்து வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மற்றும் தமிழக அரசு பயணிகளின் உயிரோடு விளையாடுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.