Tamilians North Indian Clash: அத்துமீறிய வடமாநிலத்தவர்கள்!துரத்தி துரத்தி தாக்குதல் மதுபோதையில் ரகளை

பல்லடத்தில் தமிழக - வட மாநில இளைஞர்கள் மது போதையில் மோதிக்கொண்டு அரசு பேருந்து கண்ணாடிகளை உடைத்தும், அங்குள்ள மக்களை தாக்கியும் கலவரம் செய்துள்ளனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் எதிர்புறமாக உள்ள அரசு மதுபான கூடத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த குணசேகரன் பாலமுருகன், மதன் மாறி செல்வம் உள்ளிட்ட ஆறு பேர் மது அருந்த சென்றுள்ளனர். அதே மதுபான கூடத்தில் வடமாநிலத்தை சேர்ந்த பப்பு ராஜ் உள்ளிட்ட 4 வட மாநில இளைஞர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது தமிழக இளைஞர்களுக்கும் வட மாநில இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகளப்பாக மாறி உள்ளது. இதில் தமிழக இளைஞர்களை வட மாநில இளைஞர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி சேர்ந்த இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து வட மாநில இளைஞர்களை துரத்தி துரத்தி சரமாரியாக தாக்கினர் .

மேலும் மது போதையில் பாலமுருகன் என்ற இளைஞர் பல்லடம் நோக்கி வந்த அரசு பேருந்து கண்ணாடிகளை இரும்பு கம்பியால் தாக்கி உடைத்தார். இதில் படுகாயம் அடைந்த வட மாநில இளைஞர்கள் இரண்டு பேர் மற்றும் தமிழக இளைஞர்கள் 4 பேர் பல்லடம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களை பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிபட்ட நிலையில் இளைஞர்கள் அனைவரும் போலீசார் காலில் விழுந்து தங்களை விட்டு விடுமாறு கெஞ்சி கதறிய வீடியோ காட்சிகளும் பேருந்து கண்ணாடி உடைத்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola