Sivagangai News | தம்பி மனைவியின் உதட்டைகடித்து கொதறிய அண்ணன்!சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

Continues below advertisement

தம்பி மனைவியின் உதட்டைகடித்து கொதறிய அண்ணன்!சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

சிவகங்கையில் இடத்தகராறில் தம்பி மனைவியின் உதட்டை அண்ணன் கடித்து கொதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வடக்கு சாலைகிராமத்தில் வசித்து வருகின்ற்னர் லட்சுமணன் மற்றும் தங்கம் தம்பதியினர். இந்நிலையில் லட்சுமணன் மற்றும் அவரது உடன் பிறந்த சகோதரர் ராமர் இருவரும் அருகருகே வசித்து வருகின்றனர்,  வெகு நாட்களாக இந்த இருவருக்கும் வீட்டின் அருகே செல்லும் பாதை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. அடிக்கடி சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டு காவல் நிலையத்திற்கு செலவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் இந்த குடும்பத்தினர்.

இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு இந்த பாதையை ராமர் அடைத்து விட்டாதாக கூறப்படுகிறது, இதனால் இரண்டு குடும்பத்திற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறி உள்ளது. இதில் ராமர் தனது தம்பி மனைவியான தங்கத்தின் உதட்டையும் வாயையும் சேர்த்து கோபத்தில் கடித்து கொதறியுள்ளார். இந்நிலையில் அவருக்கு அதிகமாக இரத்தம் கொட்டிய நிலையில் அங்கிருந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram