Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFE

’’மோடி BORE அடிக்கிறார்’’
இறங்கி அடித்த ராகுல்
பாசமலர்களின் THUGLIFE 


’’சும்மா சும்மாலாம் மோடி பத்தி பேசமுடியாது.. அதான் ஒருவாட்டி பேசியாச்சுல போதும்.. போர் அடிக்குது’’ என பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி வயநாட்டில் பேசியுள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராகுலுக்கு சப்போர்ட்டாக பிரியங்காவும் களத்தில் இறங்கி அதிரடி காட்டியுள்ளார்.

வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். பிரியங்காவின் முதல் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தங்கைக்கு உறுதுணையாக அண்ணன் ராகுலும் வயநாட்டிலேயே முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இத்தனை ஆண்டுகளாக பிரியங்கா காந்தி ராகுலுக்கு பிரச்சாரம் செய்த நிலையில், தற்போது அதைவிட ஒருபடி மேலே தங்கைக்காக பிரச்சாரம் செய்வேன் என்பது போல் செயல்பட்டு வருகிறார் ராகுல். இந்நிலையில் வயநாடு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, ’’பிரதமர் மோடி அவரது தொழிலதிபர் நண்பர்களுக்கு தான் உதவி செய்கிறார் மக்கள் நலனை விட அவருக்கு அதுவே முக்கியம்’’ என பிரதமரை சாடியிருந்தார் பிரியங்கா. இந்நிலையில் பிரியங்காவுக்கு அடுத்ததாக பேச வந்த ராகுல் காந்தி பிரதமரை வைத்து தக் லைஃப் செய்துள்ளார்.

தனது உரையை தொடங்கிய ராகுல், ’’மீண்டும் மோடி குறித்து நான் பேசப்போவதில்லை, அதான் பிரியங்கா பேசிட்டாரே..எதற்கு மறுபடியும் பேசணும் போர் அடிக்குது..என கிண்டலடித்துள்ளார் ராகுல். தொடர்ந்து பேசிய அவர், ஒன்று நான் மக்களுக்கு பொலிட்டிகள் மெசேஜ் சொல்லணும் இல்லை நான் என் குடும்பத்தினர்களுடன் [மக்களுடன்] உரையாட வேண்டும். நான் என் குடும்பத்தினர்களுடன் பேசுவதை போலவே உங்களிடம் பேசுகிறேன். உங்கள் வேட்பாளர் குறித்து பேசுகிறேன்’’ எனக்கூறி மோடி குறித்து பேசுவதை தவிர்த்துவிட்டார் ராகுல். ராகுலின் இந்த ஸ்டேட்மெண்ட் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தியிடம், ராகுல் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "ஆம், அவர் சொல்லும் விஷயங்கள் இப்போது பழசாகிவிட்டதாக நான் நினைக்கிறேன். மேலும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் அவர்களை பிளவுபடுத்துவது, மக்களிடையே அச்சத்தை பரப்புவது போன்ற அவரது கொள்கைகள் இனிமே எடுபடாது’’ என அண்ணனுக்கு சப்போர்ட்டாக பேசி மோடியை சாடியுள்ளார் பிரியங்கா காந்தி.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola