
Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTV
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டிற்குள் புகுந்து தூய்மை பணியாளர்கள் மலக்கழிவுகளை ஊற்றி வீட்டையும் சூறையாடியதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தனது தாயாருடன் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனது யூடியூப் சேனலில் சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கூறி இவர் மீது சில வழக்குகளும் இருக்கிறது. அண்மையில் தான் சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இச்சூழலில் தான் துப்புரவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி உள்ளது என யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோக்களையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு,”இன்று காலை 9.30 மணி முதல், துப்புறவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த இந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டினர். என்ன நடந்தது என்று என் தாயாருக்கு போன் செய்தபோது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன். ஒரே ஒரு உதவி ஆய்வாளரும் ஒரு காவலரும் மட்டும் வந்தனர். 9.30 மணி முதல் இது வரை வரை போராட்டம் நடத்தியவர்கள் அந்த இடத்தை விட்டு அகலவில்லை. அந்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். யாருடைய தூண்டுதலில் இந்தத் தாக்குதல் நடைபெறுகிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை என்று கூறியுள்ளார்.
சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயாலாளருமன எடப்பாடி பழனிசமி கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில்,”ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம்; அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது, மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்.”என்று கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.