RN Ravi: மோடியின் நம்பிக்கை.. தோவலின் தோழன்.. யார் இந்த ஆளுநர் RN ரவி?

RN Ravi: தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி குறித்து அறிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் வந்திருக்கிறது. காரணம் என்னவென்றால் நீண்ட நாட்களாக இருந்த பன்வாரிலால் புரோஹித் திடீரென மாற்றப்பட்டதும் , இந்த பெயரை பெரிய அளவில் கேள்விப்படாததுமே. தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பொறுப்பேற்கவிருக்கும் ஆர்.என்.ரவி பீகாரில் பிறந்தவர். கேரளா பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. ஆரம்ப காலத்தில் கேரள மாநில பணிகளில் இருந்த ரவி, சில ஆண்டுகளுக்குள் சிபிஐக்கு மாற்றப்பட்டார்.

அங்கு Oraganised Crime unit எனப்படும் குழுவாக இணைந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து தடுக்கும் பிரிவிலும் ஊழல் தடுப்பு பிரிவிலும் பணியாற்றினார். கண்காணிப்பு பணி பிடித்துப் போக, உளவுத்துறையில் சேர்ந்தார் ரவி. மத்திய அரசின் பல்வேறு பணிகளில் பணியாற்றியுள்ள ரவி, துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் Good Book ல் இடம்பெற்றிருந்த அதிகாரிகளில் மிக முக்கியமானவர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola