
Rahul Tiky : ”அம்மாவ சிரிக்க வைக்கணும்” INSTA பிரபலம் மரணம்! கண்கலங்கும் ரசிகர்கள்
அம்மாவ சிரிக்க வைக்கனுனு எப்பவும் நெனச்சுட்டு இருப்பேன். அப்பாவோட கதகதப்பு இல்லைன்னு ரொம்ப Feel பண்ணிக்கிறேன் என்று சாலை விபத்தில் மரணமடைந்த Insta பிரபலம் ராகுல் டிக்கி கடைசியாக பேசிய வீடியோ வெளியாகி பார்ப்போரை கண்கலங்கச் செய்துள்ளது.
ஈரோடு அருகே உள்ள கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். Instagram influencer ஆன இவருக்கு லட்சக்கணக்கான Follower இருக்கிறார்கள். இவர் Instagram-ல் காமெடி வீடியோக்களை தொடர்ந்து பதிவுட்டு வந்தார். இவரது வீடியோக்கள் எல்லாம் கரெண்ட் Trend என்னவோ அதன்படி இருக்கும். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சையை இவர் ரீகிரியேட் செய்து காமெடியாக வெளியிட்ட வீடியோக்கள் எல்லாம் பார்ப்பவர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து இது போன்ற வீடியோக்களை இவரது You Tupe பக்கத்திலும் பகிர்ந்துவந்தார்.
இந்த நிலையில் தான் அண்மையில் திருமணமான ராகுல் டிக்கி தனது மனைவியை அழைத்து வருவதற்காக பைக்கில் சென்றிருக்கிறார். கவுண்டம்பாடிக்கு செல்லும் நுழைவு பாலத்தில் ராகுல் டிக்கி அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் இவரது பைக் பாலத்தின் நடுவில் உள்ள Centre Median-ல் மோதி உள்ளது.
இதனால் தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டதால் சம்பவ இடத்திலேயே ராகுல் டிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது ஈரோடு மட்டுமின்றி இவரது பலோயர்ஸ்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில் தான் அண்மையில் ராகுல் டிக்கி பேசிய வீடியோ Social Media-வில் வைரலாகி பார்ப்போரை கண்கலங்கச் செய்துள்ளது. அந்த வீடியோவில், “எனக்கு அப்பா இல்ல. அப்பாவோட கதகதப்பு இல்லைன்னு ரொம்ப Feel பண்ணி இருக்கேன்.
அம்மா தான் என்ன வளத்துட்டு இருக்காங்க. அம்மா எனக்காக ரொம்ப கஷ்டபடுறாங்க.. என்னால அம்மா கஷ்டபடுறத பாக்க முடியல.. அம்மாவ சிரிக்கவைக்கனும்னு நான் நெனச்சுட்டு இருப்பேன். அதனால தான் இப்டி எல்லாரையும் சிரிக்கவைக்கிற வீடியோஸ் போடுறேன். எனக்கு கிடைச்ச கிப்ட் என்னோட பைக் தான். ”என்று ராகுல் டிக்கி பேசியிருக்கிறார். தற்போது அந்த பைக்கே இவரது உயிரை காவு வாங்கி விட்டது என்று ரசிகர்கல் சோகத்துடன் கமெண்ட் செய்துவருகின்றனர்.