
Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெக
தவெக 15% to 20% வாக்குகளை பெறும் என விஜயிடம் பிரசாந்த் கிஷோர் கொடுத்த அறிக்கை குறிப்பிட்டருந்ததாக தகவல் வெளியான நிலையில் நான் அப்படி சொல்லவேயில்லை என்று பிரசாந்த் கிஷோர் அடித்துக் கூறியுள்ளார்.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் பிரசாந்த் கிஷோரை நேரில் சந்தித்து முக்கிய மீட்டிங் ஒன்றை நடத்தினர். அப்போது தமிழ்நாட்டில் தற்போது விஜய்க்கு எவ்வளவு வாங்கு வங்கி இருக்கிறது என்ற அறிக்கை ஒன்றை தயார் செய்து பிரசாந்த் கிஷோர் கொடுத்ததாக பேச்சு இருக்கிறது.
அதில் தவெகவுக்கு தற்போது 15 முதல் 20% வரை வாக்கு சதவீதம் இருப்பதாக சொல்லியுள்ளதாக தெரிகிறது. விக்கிரவாண்டி மாநாட்டிற்கு பிறகு விஜய்யின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் பேச்சு இருக்கிறது. மீட்டிங்கிற்கு பிறகு ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமியும் விஜய்யை சந்தித்து பேசியுள்ளனர். இந்த அறிக்கையை வைத்து அடுத்தகட்ட வேலைகளில் இறங்க விஜய் தயாராகிவிட்டதாக சொல்கின்றனர்.
இந்தநிலையில் தவெகவுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வரும் பிரசாந்த் கிஷோர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனித்தே போட்டியிடும் என உறுதியாக கூறினார். மேலும் தவெக 15% to 20% வாக்குகளை பெறும் என விஜயிடம் பிரசாந்த் கிஷோர் கொடுத்த அறிக்கை குறிப்பிட்டருந்ததாக தகவல் வெளியானது. இதுக்குறித்து கேள்வி எழுப்பட்ட நிலையில் நான் அப்படி சொல்லவேயில்லை என்று பிரசாந்த் கிஷோர் அடித்துக் கூறியுள்ளார்.
தவெக அவங்க வேலைகளை சரியா செஞ்சாங்கனா பெருபான்மை ஓட தமிழகத்தில் ஆட்சி அமைப்பாங்க அப்படினு தான் நான் சொன்ன..இது தான் என்னோட கருத்தும் கூட என கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாம அவங்க உண்மையா உழைச்சாங்கனா அவங்களுக்கான ஆதரவு நிச்சயம் தமிழகத்துல கிடைக்கும்.
தவெக உடன் கூட்டணி அமைக்க அதிமுக விரும்பினாலும், விஜய் தனித்து போட்டியிடுவதையே விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த முடிவு மாற வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், நான் சொல்றத குறிச்சு வச்சிகோங்க தனித்து போட்டியிடும் தவெக, பெரும்பான்மையுடன் தேர்தலில் வெல்லும் எனவும் அவர் அடித்துக் கூறியுள்ளார்.