
Petrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறு
விழுப்புரம் அருகே எத்தனால் கலப்படம் செய்யப்பட்ட பெட்ரோலை விற்பனை செய்ததால் வாடிக்கையாளர்க்கும் ஊழியர்க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னையைச் சேர்ந்த மருத்துவர் போரஸ் புருஷோத்தமன் சென்னையிலிருந்து திருவண்ணாமலை சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பி கொண்டு இருந்த போது செஞ்சி அருகே உள்ள ஊரணிதாங்கல் என்ற இடத்தில் எச்.பி.பெட்ரோல் பங்கில் 3000 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார்.
சற்று தூரம் சென்றவுடன் வாகனம் சரிவர இயங்காத காரணத்தினால் அங்கிருந்து மீண்டும் பெட்ரோல் நிலையத்திற்கு வந்து ஒரு வாட்டர் கேனில் பெட்ரோலை வாங்கி சோதித்துப் பார்த்தபோது பெட்ரோலில் எத்தனால் கலந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளார்.
இது குறித்து பெட்ரோல் நிலையத்தில் மேலாளரிடம் கேட்டபோது மருத்துவருக்கும் மேலாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் அருகில் இருந்த கார் பழுது பார்க்கும் மெக்கானிக்கை வரவைத்து காரை பழுது பார்த்தனர்.மேலும் பெட்ரோல் நிலையத்தாருக்கும் டாக்டர் போராஸ் புருஷோத்தமனுக்கும் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.