ABP News

Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

Continues below advertisement

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால்  உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ். இவர்,1999ம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சமுத்திரம், கடல்பூக்கள், அல்லி அர்ஜூனா, வருஷமெல்லாம் வசந்தம் போன்ற படங்களில் கதாநாயகனாகவும் பல்லவன், ஈர நிலம், மகா நடிகன், மாநாடு, அன்னக்கொடி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2022ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இதற்கு முன்னர், உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். மலையாள நடிகையான நந்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் தான் மனோஜ் பாரதிராஜாவுக்கு, சில நாட்களுக்கு முன்பு இதய ஆபரேஷன் நடந்துள்ளது. இச்சூழலில் தான் இன்று மாலை சேத்துப்பட்டில் உள்ள அவருடைய வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மனோஜ் பாரதிராஜாவிற்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசைஞானி இளையராஜா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram