
Shihan Hussaini Vijay | குரு துரோகியா விஜய்? ”டிராகனுக்கு டைம் இருக்கு ஹுசைனியை பாக்க மனமில்லை”
தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஹுசைனியின் மரணம், விஜய்யின் மனதில் மட்டும் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்று கூறும் ஹுசைனி தரப்பினர், அவர் குருத்துரோகியா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிறந்த கராத்தே வீரராக விளங்கிய ஷிஹான் ஹுசைனி, 3 முறை உலக கராத்தே போட்டியில் வென்றுள்ளார். வில்வித்தை வீரருமான அவர், 2016-ம் ஆண்டு தமிழக வில்வித்தை சங்கம் என்ற அமைப்பை தொடங்கி, பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்தார். ஏராளமான மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்த அவர், கராத்தே மற்றும் வில்விதிதையில் பல்வேறு சாதனைகளையும் புரிந்துள்ளார். தனது கடைசி காலம் வரையிலுமே மாணவர்களுக்கு அவர் தொடர்ந்து பயிற்சிகளை வழங்கி வந்துள்ளார். இச்சூழலில் தான் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார்.
முன்னதாக, கடந்த 2021 ம் ஆம் ஆண்டு வெளியான பத்ரி திரைப்படத்தில், விஜய்யின் உடற்பயிற்சி பயிற்சியாளராக நடித்த ஷிஹான் ஹுசைனி, விஜய்யை ஒரு வீரனாக உருவாக்கும் பயண சோல்ஜர் பாடலின் உருவாக்கத்திற்கும் பங்களித்து, அந்த பாடல் காட்சியிலும் தோன்றினார். இது ஒருபுறமிருக்க, தனது மருத்துவ செலவிற்காக, தனது பிரமாண்டமான வீட்டை விற்பதாகக் கூட அவர் பதிவிட்டிருந்தார். ஆனால், இத்தனை நடந்த பிறகும் கூட, நடிகரும், தவெக தலைவருமான விஜய், ஒரு மரியாதைக்கு கூட ஹுசைனியை மருத்துவமனைக்கு சென்று சந்திக்கவில்லை. அதே சமயம் எந்த ஒரு கருத்தும் கூட தெரிவிக்கவில்லை. இதனிடையே, டிராகன் திரைப்பட குழுவை விஜய் நேரில் அழைத்து பாராட்டிய புகைப்படங்கள் நேற்று சோசியல் மீடியாவில் வெளியானது. இதற்கெல்லாம் நேரம் இருக்கும் விஜய்க்கு மரணத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த தனக்கு நன்கு பரிட்சயமான ஒருவர் குறித்து நினைக்கக் கூட நேரமில்லையா என சோசியல் மீடியாவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.