Mamallapuram : ‘’எங்க மேல தப்பு இல்ல! ஒரிஜினல் VIDEO பாருங்க’’ புலம்பும் பெண்கள்

மாமல்லபுரத்தில் தனியார் பாதுகாப்பு காவலரை தாக்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் ’’நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை முழு வீடியோவை பாருங்க’’ என புலம்பும்  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

செங்கல்ப்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடந்த ஞாயிறன்று கார் பார்க்கிங் பாதுகாவரை இரண்டு பெண்கள் உட்பட 4 நபர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தாக்கப்பட்ட பார்க்கிங் பாதுகாவலர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து மூவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் தாம்பரம் அடுத்த  முடிச்சூர் பகுதியை சேர்ந்த கீர்த்தனா, சண்முக்ப்ப்ரியா பிரபுதாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

பின்னர் மூவரையும் திருப்போரூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு மாமல்லபுரம் போலீசார் ஆஜர்ப்படுத்தினர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட மூவரையும் போலிசார் அழைத்து செல்கையில்  நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, குழந்தைகள் மீது  எச்சிலை துப்பிய காரணத்தினால் நாங்கள் இறங்கி கேட்ட போது  தகாத வார்த்தைகளில் அவர் திட்டினார். அதை  யாரும்  வீடியோ எடுக்கவில்லை என புலம்பினர். 

மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், வருகிற நவம்பர் 5 தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து பிரபுதாஸ் செங்கல்பட்டு மாவட்ட சிறையிலும், சண்முகப்ப்ரியா மற்றும் கீர்த்தனா ஆகிய இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola