Priyanka Gandhi Wayanad : ’’35 ஆண்டுகள் கட்சிக்காக..முதல்முறையாக எனக்காக !’’பிரியங்கா EMOTIONAL

17 வயதில் தந்தைக்காக வாக்கு சேகரித்தேன்..கடந்த 35 ஆண்டுகளாக கட்சிக்காக பிரச்சாரம் செய்தேன் இன்று முதன்முறையாக எனக்காக பிரச்சாரம் செய்ய வந்துள்ளேன் என பிரியங்கா காந்தி வயநாடு மக்கள் மத்தியில் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடும் நிலையில்,இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இந்நிலையில் பிரியங்கா ராகுல் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பிரியங்கா காந்தியுடன் அவரது கணவர் ராபர்ட் வத்ரா, மகன் ரைஹான் ராஜிவ் வத்ரா ஆகியோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வயநாடு மக்களிடம் பிரியங்கா காந்தி உணர்வுப்பூர்வமாக உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 17 வயதில் எனது தந்தைக்காக வாக்கு சேகரித்தேன். 35 ஆண்டுகளாக கட்சி நிர்வாகிகளுக்காக பரப்புரை செய்துள்ளேன் முதல்முறையாக எனக்காக பரப்புரை செய்கிறேன்.

மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்தில் சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். காந்திஜியின் கொள்கைகளே எனது சகோதரரின் ஒற்றுமை பயணத்திற்கு வழிவகுத்தது. உங்களது ஒத்துழைப்பின்றி இது சாத்தியமில்லை. ஒட்டுமொத்த நாடும் எனது சகோதரருக்கு எதிராக இருந்து போது நீங்கள் அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளீர்கள். எங்கள் மொத்த குடும்பமும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்.

நீங்கள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனைகள் குறித்து அவர் என்னிடம் கூறியுள்ளார். நான் உங்கள் வீட்டுக்கே நேரடியாக வந்து உங்கள் பிரச்சனைகளை கேட்டு அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து பரிசீலிக்கிறேன்.
உங்களுக்கு சேவையாற்ற எனக்கு வாய்ப்பளியுங்கள் என பிரியங்கா காந்தி பேசியுள்ளார்

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola