Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!

Continues below advertisement

கரூரில் இளம் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. அப்போது கை குழந்தையுடன் மனு கொடுக்க வந்த ஒரு இளம்பெண் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தான் மறைத்துக் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை தன்மேலும் தனது குழந்தை மீதும் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இதனை கண்டதும் உடனடியாக அந்த பெண்ணின் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து தூக்கி வீசினர்.இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் மீதும் குழந்தை மீதும் தண்ணீரை ஊற்றினர். 

இதைத்தொடர்ந்து அப்பெண் யார் ஏன் அவ்வாறு செய்தார் என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

நந்தினி என்ற அப்பெண் கைக்குழந்தையுடன் கணவரை விட்டு பிரிந்து வசித்து வருவதாக கூறினார். மேலும் கடந்த 11ஆம் தேதி தனது தந்தை வசிக்கும் ஊரான புலியூர் வெங்கடாபுரம் கிராமத்திற்கு சென்ற பொழுது, தனது தந்தை மற்றும் பெரிய மகன்கள் சேர்ந்து தன்னை அடித்து உதைத்து, தான் போட்டிருந்த உடைகளை கிழித்து துரத்தி விட்டதாக கூறி அழுதுள்ளார். அதன் பிறகு காயங்களுடன் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அங்கு வந்த பசுபதிபாளையம் போலீசாரிடம் தன்னை தாக்கியவர்களின் மீது புகார் அளித்ததாகவும், அந்த புகார் குறித்து பசுபதிபாளையம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.  அதனால் மன உளைச்சலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வாகனம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முடிவெடுத்து வந்தேன் என தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram