Harini Amarasuriya Profile : தேயிலை தொழிலாளியின் மகள்!இலங்கையை அலறவிட்ட சிங்கப்பெண்!யார் இந்த ஹரிணி?

Continues below advertisement

இலங்கை அரசியலில் பலம் திண்ணு கொட்டை போட்ட ரனில் விக்ரமசிங்கே, சஜீத் பிரேமதாசாவை ஒரு பெண்மனி எதிர்த்தார்.. இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகேவை வெற்றி பெற வைக்க 21500 கீ.மி தூரம் பயணம் செய்து இலங்கையின் மூலை முடுக்குகள் வரை சென்று, அனல் பறக்க பேசினார்.. உங்களிடம் அரசியலில் பின்புலம் இருக்கிறது, நீண்ட காலம் அதிகாரத்தில் திழைத்துள்ளீர்கள், பணம், செல்வாக்கு என அனைத்தும் இருக்கலாம், ஆனால் மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.. அதிபர் தேர்தலில் ஜெயிப்போம், நாடாளுமன்றத்தை கலைப்போம் என கர்ஜித்தார்.

அவர் தான் இன்று இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ள ஹரிணி அமரசூரிய.. சாதாரண் தேயிலை தோட்ட தொழிலாளியின் மகள், கல்வி.. கல்வி.. என்ற ஒற்றை முழக்கத்தை மட்டுமே முன்வைத்து இலங்கையின் அறியனையில் அமர்ந்த கதை சுவராசியமானது..

1970ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி கொழும்புவின் சாதாரண குடும்பத்தில் பிறந்தார் ஹரிணி அமரசூரிய. சிற்ய் வயதிலிருந்தே கல்வியின் மீது ஆர்வம் கொண்ட இவர்,  பள்ளிக்கல்வியை கொழும்புவில் முடித்தார். அதன் பின் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பிரசித்தி பெற்ற ஹிந்து கல்லூரியில் 1991 முதல் 1994 வரையிலான காலகட்டத்தில் சமூகவியல் துறையில் பயின்று பட்டம் பெற்றார். 

தொடர்ந்து மேற்படிப்பிற்காக ஆஸ்திரேலியா சென்ற ஹரிணி அங்கே மானுடவியலில் பட்டம் பெற்று, பின்னர் ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியலில் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். 

இலங்கையின் ஓப்பன் யுனிவர்சிட்டியில் சமூக அறிவியல் பிரிவில் விரிவுரையாளராக பணியாற்றிய ஹரிணி, அரசியல் பக்கம் தன்னுடைய பார்வையை திருப்ப தொடங்கி இருந்தார். 2011ம் ஆண்டு ஆசிரியர்கள் சார்பில்  முன்னெடுக்கபட்ட போராட்டத்தின் முதல் வரிசையில் நின்று கர்ஜித்த ஹரிணி அமரசூர்யா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று தீவிரமாக போராடினார்.


அது மட்டுமின்றி குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள், இளைஞர்கள், அரசியல், பாலினம், வளர்ச்சி, உலகமயமாக்கல் உள்பட பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகள் செய்து புத்தகங்களையும் எழுதியுள்ளார் இவர். 

ஆசிரியர் சங்கங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ள ஹரிணி அமரசூர்யா முன்னெடுக்காத கல்வி சார்ந்த போராட்டங்களே இல்லை என்று சொல்லலாம். தேசிய மக்கள் சக்தி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக வளம் வர தொடங்கிய ஹரிணி அமரசூர்யா கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தல் அரசியலில் குதித்தார். 

அதன் பின் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒலிக்க தொடங்கிய ஹரிணி அமரசூர்யாவின் குரல், சாமாணியர்களின் குரலாக ஒலித்தது. இலங்கையில் நிலவிய பொருளாதார சிக்கல், வேலை வாய்பின்மை, குறைந்து கொண்டே வரும் கல்வி தரம் என இவர் எழுப்பிய கேள்விகள் இலங்கை அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது. 


இந்நிலையில் அதிபர் தேர்தலில் அனுர குமார திசாநாயக்கேவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள வீதியில் இறங்கினார் ஹரிணி அமரசூரிய. இலங்கையின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்ற இவர் சுமார் 21,500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தார். அதே நேரம் இலங்கை அரசியலில் வெற்றி தோல்வியை தீர்மாணிப்பது, 52 சதவீதம் வாக்குகள் கொண்ட பெண்கள் தான், இதை நன்கு உணர்ந்திருந்த ஹரினி அமரசூர்ய பெண்களுக்கான மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.  

இந்நிலையில் தான் இலங்கை அதிபர் தேர்தலில், ஒற்றை பெண்மனியாக அத்தனை பலங்களையும் எதிர்த்து நின்று அனுரகுமார திசநாயக்கேவை வெற்றி பெற வைத்தார் ஹரிணி அமரசூர்ய.

அதை தொடர்ந்து தன்னுடைய வெற்றிக்கு காரணமாக இருந்த ஹரிணி அமரசூர்யவை இலங்கை பிரதமராக அனுரகுமார திசநாயேக்கே அறிவித்த நிலையில், இன்று அவர் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

கல்வித்துறை அமைச்சர் பொறுப்பும் ஹரிணி அமரசூர்யவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் தெற்காசிய நாடுகளில் எந்த அரசியில் பின்புலமும் இன்றி சாதாரண குடும்பத்தில் பிறந்து பிரதமர் பதவியை எட்டிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் இவர். 

இச்சூழலில் தான் கடும் பொருளார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையை புதிய பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் ஹரிணி அமரசூரிய மீட்பாரா? மீண்டும் இலங்கையை வளர்ச்சி பாதையை நோக்கி அழைத்துச் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram