Rowdy Padappai Guna: படப்பை குணாவை நெருங்கும் போலீஸ்... பரபரப்பாகும் காஞ்சிபுரம்

Continues below advertisement

Rowdy Padappai Guna:  காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா எனப்படும் குணசேகரன். இவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, நிறைய ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என 42 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் எட்டு கொலை வழக்குகள் அடக்கமாகும் பலமுறை பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார். குணாவை சுற்றி வளைக்கும் முயற்சியில், அவருடைய வலது கரமாக இருந்து வந்து போந்தூர் சிவா கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல அவருக்கு சொந்தமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆன தென்னரசு ஆகியோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram