Jewellery Theft | ’’வேற டிசைன் காட்டுங்க’’கைவரிசை காட்டிய பெண்நகைக்கடை திருட்டு

Continues below advertisement

தென்காசி அருகே பெண்மணி ஒருவர் நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து தங்க செயினை நைஸாக திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் சுரண்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள பிரபல தனியார் நகை கடைக்கு நேற்று முன்தினம் சிறுவனுடன் பெண் ஒருவர் நகை எடுக்க வந்துள்ளார். அப்போது கடைக்காரரிடம் புது மாடல் நகைகளை காட்டுங்கள் என கூறிய பெண் செயின்களை ஒவ்வொன்றாக எடுத்து பார்த்து உள்ளார்.

அப்போது பார்த்துக் கொண்டிருந்த பெண் கடைக்காரர்  நகைகளை எடுக்க திரும்பும் பொழுது கண் இமைக்கும் நேரத்தில் 12 கிராம் தங்கச் செயினை எடுத்து தனது ஹேண்ட் பேகில் போட்டுள்ளார். பின்னர் எதார்த்தமாக செயினை போட்டு பார்த்து வாங்குவது போல் பாவலா காட்டியுள்ளார். இது அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. 

பின்னர் கடைக்காரர் சோதனை செய்த போது நகை காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து சிசிடிவி காட்சியை பார்க்கும் போது அந்த பெண் திருடியது அம்பலமானது. இதனை அடுத்து கடை உரிமையாளர் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் பெண் ஒருவர் நகைக்கடையில் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram