Cuddalore Drunkard : அடடா மழைடா..அடைமழைடா! கொட்டும் மழையில் குளியல்மதுபிரியர்கள் ATROCITY

டாஸ்மார்க் கடை எதிரே குடிபோதையில் மழையில் சோப்பு போட்டு குடித்த மது பிரியர்கள் இணையத்தில் வீடியோ வைரல்

 

தென்தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை அல்லது மிதமான மழை பெய்யகூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.


கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது இதே போல் நேற்று இரவு விருத்தாசலம் பகுதியில் மழை பெய்த போது  குடிமகன்கள் மது போதையில் விருத்தாச்சலம் கடைவீதி பகுதியில் டாஸ்மார்க் கடை எதிரே மழையில் சோப்பு போட்டு குளித்தனர் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசான  மழை பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola