Rahul gandhi : எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்? I.N.D.I.A போடும் ப்ளான்! கூட்டத்தில் பேசியது என்ன?

Continues below advertisement

 எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்? I.N.D.I.A போடும் ப்ளான்! கூட்டத்தில் பேசியது என்ன?

 

இந்தியா கூட்டணி இந்தியா கூட்டணி வரிசையில் அமர முடிவு செய்துள்ளதாகவும், எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதேநேரம், அந்த கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரை I.N.D.I.A. கூட்டணி பக்கம் இழுப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்தநிலையில் இந்தியா கூட்டணியினரின் ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதா அல்லது எதிர்க்கட்சியாக இருக்கலாமா என ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என, எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், விருப்பமுள்ள கட்சிகள் I.N.D.I.A. கூட்டணிக்கு வரலாம் எனவும் தெரிவித்துள்ளனர். 

அப்படி எதிர்க்கட்சியாக இருப்பதென்றால், எதிர்க்கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்ற பேச்சும் சென்றிருக்கிறது. ஏற்கனவே பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கேவையோ ராகுல்காந்தியையோ நிறுத்தலாம் என திட்டமிடப்பட்டது. இந்தநிலையில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தியை தேர்ந்தெடுக்க கூட்டணியினர் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.  I.N.D.I.A. கூட்டணியை பெருமளவில் பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்த்தது, கூட்டணியில் காங்கிரஸ் அதிக தொகுதிகளை வெல்ல முக்கிய பங்காற்றியது போன்ற காரணங்களால், ராகுல் காந்திக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு பிறகு பேசிய மல்லிகார்ஜூன கார்கே, சரியான நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என கூறினார். தற்போது எதிர்க்கட்சியாக இருந்துவிட்டு எதிர்காலத்தில் கூட்டணியை வைத்து ஆட்சியில் மாற்றம் கொண்டுவர இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளதா என்பதும் விவாதமாக மாறியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram