Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்

ஆம்பூர் அருகே அதிகாலையில் ஏற்பட்ட  அடுத்தடுத்து  சுற்றுலா வேன், கார், லாரி என அடுத்தடுத்து வெவ்வேறு 3  விபத்துகள் ஏற்பட்டதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன்  அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பகீர் கிளப்பி இருக்கிறது.

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த நண்பர்கள் 17 பேர் ஒன்றாக தர்மபுரி மாவட்டம்  ஒகேனக்கல்லிற்கு சுற்றுலா செல்வதற்காக இன்று காலை வேன் மூலம் பல்லாவரத்திலிருந்து, தர்மபுரி நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஆம்பூர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்துகொண்டிருந்த போது, திடீரென வேனின் முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வேனில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 15 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர், உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், விபத்துக்குள்ளான வேனை கிரேன் இயந்திரம் மூலம் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.மேலும் மாற்று வாகனம் மூலம் இளைஞர்கள் சுற்றுலா செல்லாமல் மீண்டும் சென்னையிற்கு திரும்பினர்.

இந்த சுற்றுல்லா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறிது நேரத்திலேயே  சென்னை வில்விவாக்கம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் தனது மனைவியுடன் ஓசூர் நோக்கி சென்ற போது, ஆம்பூர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது தினேஷ்குமார் ஓட்டிச்சென்ற கார் உரசியதில், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புசுவரில் மோதி எதிர் சாலையில் நின்றது இதில் தினேஷ்குமார் மனைவி படுகாயமடைந்த நிலையில், அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் முத்து என்பவர் காயமடைந்த நிலையில், அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்பூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 வெவ்வேறு சாலை விபத்துகள் குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.. மேலும் 2 மணி நேரத்திற்குள் ஏற்பட்ட 3 வெவ்வேறு சாலை விபத்துகள் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola