
Ajith praises MK Stalin: ”தமிழ்நாடு தான் மாஸ்!” ஸ்டாலினுக்கு அஜித் பாராட்டு! சாதித்து காட்டிய உதய்
துபாயில் நடைபெற்ற கார் ரேசில் வெற்றி பெற்ற கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நடிகர் அஜித் வாழ்த்தியுள்ள சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துபாயில் நடைபெற்ற 24ஹெச் கார் ரேசில் கலந்து கொண்டார். அஜித்குமார் ரேசிங் என்ற பெயரில் இவரது குழு கலந்து கொண்ட அந்த போட்டியில் மூன்றவது இடம் பிடித்தது. இதில், தமிழக அரசின் விளையாட்டுத் துறையின் லோகோ இடம் பெற்றிருந்தது.
இதற்கு தமிழ் நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்தப் பந்தயத்தில் திராவிட மாடல் அரசின் தமிழக விளையாட்டுத்துறை லோகோவைப் பயன்டுத்தியதற்காக அஜித்குமார் ரேஸிங் அணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தா. அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்டோரும் இந்த லோகோவை குறிப்பிட்டு அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதேபோல், வெற்றி பெற்ற பிறகு தமிழ் நாடு விளையாட்டு ஆணையத்தின் லோகோவை அஜித் உயர்த்தி காட்டியது தமிழ் நாடு விளையாட்டுத்துறையின் பங்களிப்பை காட்டுவதாக அமைந்திருந்தது.
இந்த நிலையில் தான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதய நிதி ஸ்டாலினுக்கு நடிகர் அஜித் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் Motor Sports க்கு நிறைய செய்கிறது. இந்தியாவின் முதல் இரவு நேர கார் ரேசை சென்னையில் நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது . இந்த முன்னெடுப்பு எங்கள் நாட்டில் Motor sports- ஐ அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல உதவும்” என்று பூரிப்புடன் கூறியுள்ளார் நடிகர் அஜித்.