Seeman Periyar Issue : பெரியாரை இழிவா பேசலாமா?” துரைமுருகன் அதிரடி! கைதாகும் சீமான்?

பெரியார் பற்றி சீமான் கூறியது சர்ச்சையான நிலையில், தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்க நினைத்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பதால் சீமான் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது அரசியில் வட்டரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. 


பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன்தினம் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அவரது இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. சீமானுக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் பெரியாரிய இயங்கங்கள் வழக்கு தொடர்ந்துள்ளது. 

இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் பெரியார் விவகாரம் தொடர்பாக சீமானுக்கு கண்டனம்  தெரிவித்துள்ளார். மானமும் அறிவும் இருப்போர் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர் துரைமுருகன், அறிவிலிகளின் அவதூறுகளால் பெரியாரின் புகழை மறைக்க முடியாது என்றும் பெரியார் சொல்லாதவற்றையும் சொன்னதாக அபாண்டமாக அவதூறு பரப்புகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும், யாருக்கோ ஏஜெண்டாக இங்கே அரசியல் நடத்தும் தற்குறிகள் பெரியாரை உரசிப் பார்க்கின்றன என்றும் தமிழ்நாட்டை ஏன் பெரியார் மண் என்கிறோம் என்பது சில மண்ணாந்தைகளுக்குப் புரிவதில்லை என்றும் விமர்சித்துள்ளார். பெரியார் கொள்கைகளைத் தமிழ்நாட்டை வழிநடத்துவதால் பெரியார் மண் என்கிறோம் என்றும் பெரியாரை விமர்சிக்கும் இழிவான, மலிவான அரசியல் பேர்வழிகளைப் புறக்கணிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ள துரைமுருகன், தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்க என நினைத்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும்  தெரிவித்திருக்கிறார்.

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola