Sanitation Worker Crying :10 வயதில் மதுவால் சீரழிந்த மகன்கள்..வீடு அருகே TASMAC கடை! கதறி அழும் தாய்

Continues below advertisement

தென்காசியில் தனது வீட்டிற்கு மிக அருகிலேயே டாஸ்மாக் இருப்பதால் தனது இரு மகன்களும் 10 வயதில் இருந்தே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அவர்கள் வாழ்வே சீரழிந்துவிட்டதாக பெண் தூய்மை பணியாளர் அழுது புலம்பும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் டாஸ்மாக்கை உடனடியாக மூடவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அப்பெண்மணி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சங்கரன்கோவில் அருகே உள்ல முள்ளிக்குளம் பகுதியை சேர்ந்த மாடாசாமி என்பவரின் மனைவி ராயம்மாள். தென்காசி முனிசிபாலிட்டியில் பெண் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் ராயம்மாளுக்கு 25 மற்றும் 22 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இவர்களது வீட்டிற்கு மிக அருகிலேயே அரசு மதுபானக்கடை அமைந்துள்ளதால் சிறுவயதிலேயே இவரது இரு மகன்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். தற்போது இருவரும் வேலை வெட்டிக்கு செல்லாமல் வீட்டில் வைத்திருக்கு பணத்தை எல்லாம் எடுத்து குடித்தே அழிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராயம்மாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தனது வீட்டின் அருகே உள்ள டாஸ்மாக்கை உடனடியாக மூடவேண்டும் என மனு அளித்துள்ளார்.

மேலும் இவர்கள் வசித்து வரும் வீடு கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு மாநில அரசால் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது வீடும் பழுதடைந்த நிலையில் தங்க இடமின்றி மாட்டு தொழுவத்தில் குடும்பம் நடத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் சில நாட்களுக்கு முன்பே அரசு சார்பில் வீடு கட்டி தருவதாக தெரிவிக்கப்பட்டும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், டாஸ்மாக்கை மட்டும் மூடினால் போது எனது மகன்களே வேலைக்கு போய் சம்பாதித்து வீடு கட்டிக்கொள்வார்கள் என வேதனையில் புலம்பியுள்ளார் ராயம்மாள்.

அரசு மதுபானக்கடையால் 10 வயதிலேயே தனது மகன்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாக தாய் வேதனையில் கதறும் காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக்களை உடனடியாக மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram