Gym Master Death | காதில் ரத்தம்..பாத்ரூமில் சடலம்..ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்!

Continues below advertisement

சேலத்தில் அதிக நேரம் உடற்பயிற்சி செய்ததால் ஜிம் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகர் கோட்டை வெங்கடசாமி தெருவை சேர்ந்த மகமூத்தின் மகன் முகதீர் முகமது. இவர் ஜிம் நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் ஜிம்மிற்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. 

இந்நிலையில் இரவு 10:30 மணி ஆகியும் முகதீர் முகமது வீடு திரும்பாததால் அவரது தாய் அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போன் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ஜிம்மிற்கு சென்று பார்த்த போது, அப்போது அங்குள்ள நீராவி குளியல் அறையில் அவர் மயங்கி விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த நீராவி குளியல் அறை முழுவதும் கண்ணாடி கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது காதில் ரத்தம் வந்த நிலையில் அவர் கிடந்தார். 


அஇந்நிலிஉடற்பயிற்சியில் ஈடுபட்ட அவர் நீராவி குளியல் போட்டன் தாக தெரிகிறது.

அவரை மீட்டு உடனடியாக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்து பார்த்தபோது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை குடும்பத்தினர் வீட்டுக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், முகதீர் முகமதுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. அவர் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கூறியுள்ளனர். 

இது தொடர்பாக முகதீர் முகமதின் தாய் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை ஜிம்முக்கு செல்ல வேண்டாம் என்று பலமுறை கூறியும், என் பேச்சைக் கேட்காமல் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்து போன் செய்தேன். ஆனால் எடுக்காததால் அவரது தம்பியை அனுப்பி பார்க்கச் சொன்னபோது குளியல் அறையில் மயங்கி விழுந்ததாக தகவல் வந்தது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம் அவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ததாலும், உயர் ரத்த அழுத்தம் இருந்ததால் தனது மகன் உயிரிழந்தார் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram