BJP Controversy Video |’’நாங்க ஆட்சிக்கு வரலனா..உங்கள சூறையாடிருவாங்க!’’பாஜக மதவெறி வீடியோ

Continues below advertisement

இம்முறை ஜார்கண்டில் பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால், நீங்கள் உங்கள் வீட்டை மறந்துவிட வேண்டியது தான். இஸ்லாமியர்கள் உங்களின் வீடு, உடைமைகள் அனைத்தையும் எடுத்துக்கொள்வார்கள் என்று பொருள் படும் விதத்தில் ஜார்கண்ட் தேர்தலுக்கு முன்பாக மத வெறியை தூண்டும் வகையில் பாஜக வெளியிட்டுள்ள விளம்பரம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது...

ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பாக மத வெறுப்பு பிரச்சாரங்களை முன்னெடுக்கும் பாஜக, ஜார்கண்ட் தேர்தலுக்கு முன்பாக ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த சோரன் முதல்வராக உள்ளார். பாஜக எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜார்கண்ட்டில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில், 2வது மற்றும் இறுதி கட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது. 

இந்த சூழலில் ஜார்காண்ட் பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் “ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் ஒரு ஆதரவாளரின் வீட்டின் காலிங் பெல் அடிக்கிறது. வீட்டில் இருப்பவர் மணி சத்தம் கேட்டு கதவை திறக்கிறார். அப்போது கூட்டம் கூட்டமாக தலையில் குல்லா அணிந்த ஆண்கள், இஸ்லாமிய அடையாளங்களுடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் குண்டுகட்டாக வீட்டிற்குள் நுழைகின்றனர். 

ஒருவரின் வீட்டை அவரிடமிருந்து அபகரித்து, உள்ளே குடியேறுகின்றனர். அப்போது வீட்டின் உரிமையாளர் என்ன நடக்கிறது, என்று புரியாமல் திகைத்து நிற்க இஸ்லாமியர்கள் இருவர் ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சிக்கு வாக்களித்ததன் விளைவு தான் இது என்று கூறுகிறார்கள். இவ்வாறாக அந்த வீடியோவில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில், மத பிரிவினையை ஊக்குவிக்கும் வகையில் பாஜக வெளியிட்டுள்ள இந்த வீடியோ நாடு முழுவதும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இதனை உடனடியாக பாஜக நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் எழுந்து வருகிறது, இந்நிலையில் இது குறித்து தேர்தல் ஆணையம் நீக்குமாறு உத்தரவிட்டது. அப்போதும் அதை நீக்காத பாஜக, அதன் பின் இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதும் நீக்கியுள்ளது. 

ஏற்கனவே கர்நாடக தேர்தலின் போது அம்மாநில பாஜக அரசு இட ஒதுக்கீடு குறித்து சமூக வலைதள பக்கத்தில்  வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் மத வெறியை தூண்டும் வகையில் பாஜக வெளியிட்டுள்ள வீடியோவிற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது, அவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உருவாகியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram