Saibaba statues removed : சாய்பாபா கடவுளே இல்லை தூக்கி வீசப்படும் சிலைகள்! உ.பி-யில் பதற்றம்!
சாய்பாபா கடவுளே இல்லை, அவரை புனித பூமியான காசியில் கோயிலுக்குள் வைத்து வணங்குவதா? எம்பெருமானான சிவனை மட்டுமே காசியில் வழிபட வேண்டும் என தெரிவித்து சனாதன ரக்ஷக் தல் என்ற அமைப்பு கோயிலில் உள்ள சாய் பாபா சிலைகளை அகற்றி வரும் சம்பவம் உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
வாரணாசியின் லோஹாத்தியா பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோயிலிலிருந்து கடந்த அக்டோபர் 1ம் தேதி, 5 அடி உயர சாய் பாபா சிலையை சனாதன் ரக்ஷக் தல் அமைப்பு அகற்றியது. அந்த சிலையை வெள்ளை நிற துணியில் சுற்றி, கங்கை நதியில் வீசிய சனாதன் ரக்ஷக் தல் அமைப்பு இந்து கோயில்களிலிருந்து சாய்பாபா சிலைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வறுபுருத்தி வருவது உத்திரபிரதேசத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது..
14 கோயில்களில் தற்போது வரை சாய் பாபா சிலை அகற்றப்பட்டுள்ள நிலையில், சாய் பாபா சிலையை அகற்ற மறுக்கும் கோயில்களுக்கு நேரடியாக சென்று 15 நாட்களுக்குள் சிலை அகற்றப்பட வேண்டும், இல்லையெனில் சாய் பாபா சிலை உடைக்கப்பட்டு அகற்றபடும் என்று மிரட்டி வருகின்றனர் .
அன்பையும், தானத்தையும் போதித்த இந்துக்கள் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடவுளாக வழிபடபடுகிறார் சாய்பாபா. இந்நிலையில் இத்தனை நாட்களாக பழக்கத்தில் இருக்கும் சாய் பாபா வழிப்பாட்டை, தற்போது நிறுத்த சொல்வது ஏன் என்ற கேள்வி சனாதன் ரக்ஷக் தல் அமைப்பின் தலைவர் அஜய் ஷர்மாவிடம் முன்வைக்கப்பட்டது.
அதற்க்கு பதிலளித்துள்ள அவர் “சாய் பாபா ஒன்றும் இந்து கடவுள் இல்லை. எந்த வேதங்களிலும், புறானங்களிலும், பகவத் கிதையிலும் சாய்பாபா குறித்து குறிப்பிடபட்டிருக்கவில்லை. அப்படி இருக்கும் போது, கோயிலுக்குள் சாய்பாபாவை வைத்து வழிப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எம்பெருமானான சிவனை மட்டுமே காசியில் உள்ள கோயில்களில் வைத்து வழிபட வேண்டும். இறந்துபோனவரை கடவுளுக்கு சரிசமமாக கோயிலில் வைத்து வழிப்படாதீர்கள், தேவையெனில் வீட்டில் வைத்து வழிப்படுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அதே நேரம் பிரசித்தி பெற்ற அயோத்தியின் ஹனுமன்கர்ஹி கோவிலின் அர்ச்சகர் ராஜூ தாஸ் “சாய் பாபா ஒரு தர்ம குரு, மகா புருஷ்ஷாக இருக்கலாம், ஆனால் நிச்சயம் அவர் கடவுள் இல்லை. நாட்டிலுள்ள சனாதனிகள் அனைவரும் சாய் பாபா சிலைகளை கோயிலில் இருந்து அகற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சாய்பாபா சிலையை வறுபுறித்தி, மிரட்டி தங்களை அகற்ற வைத்ததாக கோயில் அர்ச்சகர் இருவர் கொடுத்த புகாரின் பேரில் சனாதன் ரக்ஷக் தல் அமைப்பின் தலைவர் அஜய்ஷர்மாவை கைது செய்துள்ளது போலீஸ். மக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டதால், அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த சூழளில் கடந்த சில நாட்களாகவே, சாய் பாபா சிலைகளை அகற்றும் சனாதன் ரக்ஷக் தல் அமைப்பினர், அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வளைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சிலர் இதை சரியான நடவடிக்கை என்றும், பலர் இது தவறான செயல் என்றும் மாறுப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரம் லட்சக்கணக்கான சாய் பாபா பக்தர்களின் மத நம்பிக்கையையும், உணர்வையும் காசியில் அரங்கேறிவரும் இந்த நடவடிக்கைகள் புண்படுத்தி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இத்தகைய சூழளில் உடனே இது போன்ற நடவடிக்கைகள் கைவிட பட வேண்டும் என்று சாய் பாபா பக்தர்கள் வளியுறுத்தி வருகின்றனர். இதனால் உ.பியின் பல நகரங்களில் இது பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.