Seeman AIIMS Controversy : ’’தற்குறி.. உளறாதே!’’கட்சியை காப்பாத்திக்கோ’’ சீமானை விளாசிய திமுக
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டியது அன்புமணி ராமதாஸ் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது தற்போது விமர்சன வளையில் சிக்கியுள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு அறிவித்தது. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி மதுரை வந்த பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு முதல் செங்கல்லை நட்டு வைத்தார்.
ஆனால் அதன் பிறகு தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான எந்த பணிகளும் நடைபெறாமல் இருந்து ற்வருகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் துணை முதல்வர் உதயநிதி aiims என எழுதிய செங்கலை காட்டி மத்திய அரசை கடுமையாக சாடினார். ஒத்த செங்கலில் உதயநிதி ஓவர்நைட்டில் ஃபேமஸ் ஆகிவிட்டார்.
இப்படியான நிலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய சீமான், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் திமுக முன்னர் ஆட்சி செய்த காலத்திலேயே தொடங்கப்பட்டது. அப்போது மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில் அன்றைய மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தான் எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அப்போது உடன் இருந்தது காங்கிரஸும் திமுகவும். இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கட்டாமல் இருந்தது ஏன்? இப்போது 40 எம்.பிக்களை வைத்திருந்தும் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட குரல் கொடுக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
சீமான் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
இதனையடுத்து திமுக ஐ.டி விங் சீமானை கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்த எக்ஸ் பதிவில், ’’மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டியது யார் என்று கூட தெரியாமல் தற்குறித்தனமாக உளறாமல் இருந்தாலாவது, கட்சியில் இருக்கும் ஒன்று இரண்டு பேரையாவது காப்பாற்றிக் கொள்ளலாம்.கூட இருக்கும் பலர் கட்சியை விட்டு விலகி செல்வதால் ஏற்படும் உளறல் பாதிப்பிற்கு நல்ல வைத்தியசாலயை அணுகலாம்!’’ என குறிப்பிட்டுள்ளது,
முன்னதாக "மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வர அடிக்கல் நாட்டியது நான் தான். மதுரை தோப்பூரில் 100 ஏக்கரில் எய்ம்ஸ் அமைக்க முதல் தவணையாக ரூ.150 கோடி ஒதுக்கி 2008ல் அடிக்கல் நாட்டியதும் நானே. ஆனால், பின் வந்த அதிமுக அரசு அதை செயல்படுத்தவில்லை." என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.