Muruganantham IAS : ஸ்டாலினின் RIGHT HAND..இனி புது தலைமைச் செயலாளர்..யார் இந்த முருகானந்தம்?

Continues below advertisement

மிகவும் மோசமான ஆபத்தான அபாயகரமான அவதூறான பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பதிவுகள் போடும் நாம் தமிழர் கட்சியின் கைக்கூலிகளை லிஸ்ட் போட்டு வைத்துள்ளேன் இந்த ஆபாசப் பேர்வழிகளின் முகத்திரையை பொதுவெளியில் கொண்டு வந்தால் சீமானே நேரடியாக கைதாகும் நிலை ஏற்படலாம் என திருச்சி எஸ்பி வருண் குமார் காட்டமாக தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர் சந்திப்பில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரை தகாத வார்த்தைகள் மற்றும் மிரட்டும் விதத்தில் பேசியதாகவும் அதே போல க்கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோரும் வருண்குமார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பியதாக கூறப்படுகிறது .

இது குறித்து  திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் புகரளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில்  ஒரு நபரை அவமதிப்பது, அமைதியை சீர்குலைக்கும் வகையில் கருத்து பதிவிடுவது, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட 22 பேர் மீது திருச்சி தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே  சமூக வலைதளங்களில் எஸ்பி வருண்குமார் குறித்து அவதூறான கருத்தை பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சியை  சேர்ந்த கண்ணன் மற்றும்  திருப்பதி ஆகிய இருவரை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு தொடர்ந்து திருச்சி எஸ்பி வருண் குமாருக்கு சமூக வலைத்தளங்களில் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நாம் தமிழர் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்குள் செத்துடு போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி காவல்துறை உயர் அதிகாரி என்றும் பார்க்காமல் மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் அவரது மனைவியும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான வந்திதா பாண்டே ஐபிஎஸ் மற்றும் குடும்பத்தினர் தொடர்பாக மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பொதுவெளியில் கருத்துக்களை பதிவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் திருச்சி எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அரசியலுக்கும் இந்த விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது வீட்டில் உள்ள பெண்களையும், எனது குழந்தைகளையும், எனது குடும்பத்தாரையும் அவதூறு பேசி, மிரட்டல் விடுத்த நபர்களை விடமாட்டேன். சட்டத்தின் முன்னால் கண்டிப்பாக கொண்டு வந்து நிறுத்துவேன். என் சட்டப் போராட்டம்  தொடரும். இதை தூண்டி விட்ட நபர்களை நீதித்துறையின் முன் கொண்டு வந்து நிறுத்துவேன். வெளிநாடுகளில் இருந்து ஆபாசமாக பதிவு செய்யும் போலி ஐடிகளையும் விடப்போவதில்லை. சட்டத்தின் மேல், நீதித்துறையின் மேல் 100 சதவீதம் எனது நம்பிக்கையை வைத்திருக்கிறேன். ஆபாசத்திற்கும் அவதூருக்கும் இறுதி முடிவுரை எழுதுவோம் என தெரிவித்தார்".

இந்த நிலையில் தனது வாட் அப் போட்காஸ்ட்டில் எஸ் பி வருண் ஐபிஎஸ் தெரிவித்துள்ளதாவது மிகவும் மோசமான ஆபத்தான அபாயகரமான அவதூறான பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பதிவுகள் போடும் நாம் தமிழர் கட்சியின் கைக்கூலிகள். அந்தப் 15 பேரை லிஸ்ட் போட்டு வைத்துள்ளேன். அவர்களை ஓட ஓட அடித்தால் அந்த கட்சி சுமக்கும் அடைந்து விடும். இவர்களின் முகத்திரையை பொதுவெளியில் கிழிக்க வேண்டும். இவர்கள் யார் என்று அடையாளம் காட்ட வேண்டும். இந்த ஆபாசப் பேர்வழிகளின் முகத்திரையை பொதுவெளியில் கொண்டு வந்தால் சீமானே நேரடியாக கைதாகும் நிலை ஏற்படலாம். சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் இவர்களுக்கு பணம் அனுப்பி ஆபாச பதிவு போட சொல்கிறார்கள். இவர்களின் கைது மற்றும் வாக்குமூலத்தில் இது தெளிவடைந்து விடும். இப்பொழுது நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியம் இவர்களை பொதுவெளியில் கொண்டு வர வேண்டும். இந்தப் போலி கணக்குகளின் பின்னால் இருக்கும் உண்மையான முகத்தை பொதுமக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram