Vikravandi Exit Poll | விக்கிரவாண்டி வெற்றி யாருக்கு?பரபரப்பு EXIT POLL ! சிதறிய வாக்கு வங்கி!

Continues below advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் எந்தக் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியுள்ளது, அதிமுக வாக்குகள் யாருக்கு சென்றுள்ளன என்பது குறித்த கணிப்புகள் வெளியாகியுள்ளன.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் சார்பில் அபிநயா களமிறங்கினர். விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ட்விஸ்ட் கொடுத்தார் அதிமுக பொதுசெயலாளர் இபிஎஸ். அதனால் அதிமுக வாக்குகள் யாருக்கு செல்ல போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியது. 

மொத்தமாக 2 லட்சத்துக்கு 37 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் 195495 வாக்குகள் பதிவாகின. அதாவது 82.48 சதவீதம் வாக்குகள் இந்த இடைத்தேர்தலில் பதிவாகியுள்ளன. 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது விக்கிரவாண்டி தொகுதியில் 82.45 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. தேர்தல் நடந்து முடிந்த நிலையில், எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளது என்பது தொடர்பாகவும் பேசப்பட்டு வருகிறது. 

அதிமுக சார்பில் யாரும் களத்தில் இல்லையென்றாலும் கணிசமான வாக்குகள் பதிவாகியுள்ளதால் அந்த வாக்குகள் எல்லாம் எந்தக் கட்சிக்கு போனது என கட்சிகளின் தலைமைகளுக்கு நிர்வாகிகள் ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பதிவான வாக்குகளில் 90 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான வாக்குகள் திமுகவுக்கு கிடைத்துவிடும் என அக்கட்சியினர் உறுதியாக இருக்கின்றனர். பாமகவுக்கு 60,000 முதல் 70,000 வாக்குகளும், நாம் தமிழருக்கு 15,000 முதல் 16,000 வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

அதிமுக வாக்குகள் பெரும்பாலும் திமுகவுக்கே சென்றிருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவின் வன்னியர் சமுதாய வாக்குகளில் 60% பாமகவுக்கும், 30% திமுகவுக்கும், 10 சதவீதம் நாம் தமிழகருக்கும் மற்ற சமுதாய வாக்குகளில் 90% திமுகவுக்கும் 10 சதவீதம் பாமகவுக்கும் கிடைத்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துக்கணிப்புகளில் இப்படி பேசப்பட்டாலும், ஜூலை 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், எந்தக் கட்சி வெற்றி பெறப் போகிறது, அதிமுக களத்தில் இல்லாத நிலையில் வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை தேர்தல் முடிவுகள் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது தெரியவரும். 

JOIN US ON

Whatsapp
Telegram