ஸ்கோர் செய்த விஜய்! உளவுத்துறை கையில் REPORT! அப்செட்டில் ஸ்டாலின்
பரந்தூர் விசிட் மூலம் விஜய் ஸ்கோர் செய்து விட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் கைகளுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் களத்திற்கு வராமலே அரசியல் செய்யும் முடிவுக்கு வந்துவிட்டாரா என திமுகவினர் ரவுண்டுகட்டிய நிலையில், பரந்தூரில் இருந்து தனது கள அரசியலை ஆரம்பித்து பதிலடி கொடுத்துள்ளார் தவெக தலைவர் விஜய். ஆனால் எதிர்பார்த்ததை விட பரந்தூர் விசிட் விஜய்க்கு சக்சஸாக அமைந்துள்ளது. ஏற்கனவே விக்கிரவாண்டி மாநாடு அரசியலில் மக்கள் மத்தியில் விஜய்யின் செல்வாக்கை அதிகரித்தது.
இந்தநிலையில் பரந்தூர் விசிட் மூலம் விஜய் அதிகமாக ஸ்கோர் செய்துவிட்டதாக உளவுத்துறை ரிப்போர்ட் முதலமைச்சர் ஸ்டாலின் கைகளுக்கு சென்றுள்ளதாக சொல்கின்றனர். களத்திற்கு வந்தது மட்டுமல்லாமல் அங்கு நடந்த சில விஷயங்களும் விஜய்க்கு சாதகமாக அமைந்துவிட்டதாக சொல்லியுள்ளனர். விஜய் பரந்தூர் மக்களை சந்திப்பதற்கு அனுமதி கொடுப்பதில் காவல்துறையினர் ஆரம்பத்தில் இருந்தே கெடுபிடி காட்டினர். அதுவே தவெகவினர் மற்றும் போராட்டக் குழுவினருக்கு ஆத்திரத்தை கொடுத்தது. அரசியல் தலைவர் மக்களை சந்திப்பதை தடுக்க பார்க்கிறீர்களா என கொந்தளித்தனர்.
ஆரம்பத்தில் ஏகனாபுரத்திலேயே வைத்து விஜய் மக்களை சந்திப்பார் என ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், இறுதியில் பொடவூர் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்துதான் விஜய் சந்திக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் ஆர்டர் போடப்பட்டது. இதனை தனது பேச்சிலும் சுட்டிக்காட்டிய விஜய், நான் உங்களை உங்க ஊர்ல சந்திக்கணும்னுதான் நினைச்சேன். ஆனா அனுமதி கிடைக்கலை. ஏன்னு தெரியலை என சொன்னார்.
அதேபோல் விஜய்யை பார்ப்பதற்காக பரந்தூருக்கு படையெடுத்த தவெகவினரை போலீசார் தடுத்து கறார் காட்டினர். ஆதார் கார்டை காண்பித்த பிறகே சிலரை அனுமதித்ததாக சர்ச்சையானது. இப்படி விஜய் மக்களை சந்திப்பதற்கு இருந்த தடங்கல் அனைத்துமே மக்களிடம் அவருக்கான ப்ளஸாக மாறிவிட்டதாக உளவுத்துறை ரிப்போர்ட்டில் தெரியவந்துள்ளது.
விமான நிலையம் வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் பரந்தூரில் வேண்டாம் என்று தான் சொல்கிறோம் என விஜய் பேசியது பரந்தூரையும் தாண்டி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதாக சொல்கின்றனர். விஜய் எப்போது களத்திற்கு வருவார் என பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, அவர் ஆரம்பமே பரந்தூரை செலக்ட் செய்த ஐடியா அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்துள்ளது.
உளவுத்துறையின் இந்த ரிப்போர்ட் முதலமைச்சர் ஸ்டாலினை அப்செட் செய்துள்ளதாக சொல்கின்றனர். ஏற்கனவே தவெக மாநாட்டில் கூட்டணி தொடர்பாக பேசிய விஷயங்கள் திமுக கூட்டணிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது. 2026 தேர்தலுக்கான வேலைகளை திமுக ஆரம்பித்து வைத்துள்ள நிலையில், விஜய்யின் கள அரசியல் நெருக்கடியை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.