Vijay Maanadu | அம்பேதகர், பெரியார் நடுவில் விஜய்அண்ணா இடம்பெறாதது ஏன்? விஜய் மாஸ்டர் ப்ளான்
தவெக மாநாட்டில் காமராசர், பெரியார், அம்பேத்கருக்கு அருகில் விஜய் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட் அவுட் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அண்ணா படம் இடம்பெறாதது விமர்சனத்திற்குள்ளாகி வரும் நிலையில், இன்னும் யார் படமெல்லாம் அதில் இடம்பெற உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றி கழக கட்சியின் முதல் அரசியல் மாநாடு வரும் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தான் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு என்ன? யார் யாரெல்லாம் கட்சியில் சேரப் போகிறார்கள் மேடையில் விஜய் பேசப்போகும் அரசியல் என்ன என்பது தெரியும் என்பதால் அதன்மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மாநாடு திடலை தூர்வாறி மேடை அமைக்கும் பணிகள், கட் அவுட் மற்றும் இதர வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள கட் அவுட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குறிப்பாக காமராசர், பெரியார், அம்பேத்கர் ஆகியோருக்கு நடுவில் விஜய் இருக்கும் வகையில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட் அவுட்டில் அண்ணாவின் புகைப்படம் ஏன் இடம்பெறவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வருகிறது. எனினும் கட் அவுட் இன்னும் நிறைவு பெறாததால் முழுமையாக அமைந்த பின்னே அதுகுறித்த கேள்வி எழுப்ப வேண்டும் என ஒருசாரார் கருத்து தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் இந்த கட் அவுட்டில் இரண்டு பெண் போராளிகளின் படங்களும் இடம்பெற உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்கள் வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோராக இருக்கக்கூடும் என பேசப்பட்டு வருகிறது.