Madurai People vs Ko Thalapathy | MLA-வை முற்றுகையிட்ட பெண்கள் திணறிய கோ.தளபதி

Continues below advertisement

’’ஓட்டு கேட்க மட்டும் வாரிங்க, இப்ப எங்க பகுதி முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது. போட்டோக்கு போஸ் மட்டும் கொடுக்காமல் களத்தில் வந்து இறங்கி பாருங்கள் எங்களுடைய கஷ்டம் தெரியும்’’ என மதுரை மக்கள் திமுக எம்எல்ஏ கோ தளபதியை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஒரு மணி நேரம் பெய்த மழைக்கே மதுரை நகர் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மதுரை மாநகராட்சி 27 வது வார்டு வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்டபொம்மன் நகர் பெரியார் வீதி வாஞ்சிநாதன் தெரு போஸ் வீதி காமராஜர் தெரு உள்ளிட்ட பிரதான சாலை முழுவதிலும் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் செல்லூர் கண்மாய்  நிரம்பி பந்தல்குடி கால்வாயில் செல்லும் மழை நீர் முழுவதும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்ததால் குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் மூழ்கி சென்னை பள்ளிக்கரணை போல காட்சியளித்தது. 

இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ மாணவியர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் சாலைகளில் வானங்களை ஓட்ட முடியாமல் பொதுமக்களும் திணறினர். இந்நிலையில் அந்த வழியாக சென்ற திமுக வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ தளபதியை முற்றுகையிட்டு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஓட்டு கேட்க மட்டும் வாரிங்க, இப்ப எங்க பகுதி முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது. இறங்கி வந்து பாருங்க வாங்க என ஆக்ரோஷத்துடன் எம்எல்ஏ வை அழைத்தனர். இப்படியான சூழ்நிலையில் பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் இந்த இடத்தை விட்டு போனால் போதும் என்பது போல்  எம்எல்ஏ அந்த இடத்தில் இருந்து உடனடியாக புறப்பட்டு சென்றார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram