Udhayanidhi Stalin Journey | பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்

Continues below advertisement

சினிமாவுக்கு ஃபுல்ஸ்டாப் வைத்துவிட்டு முழுநேர பொலிட்டிசியனாக உருவெடுத்த உதயநிதி ஸ்டாலின், எம் எல் ஏ, அமைச்சர், துணை முதல்வர் என அடுத்தடுத்த கட்டங்களுக்கு அசுர வேகத்தில் வளர்ந்துவிட்டார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசியலின் கடந்து வந்த பாதையை காணலாம்.

1977 ஆம் ஆண்டு நவம்பர் 27 தேதி பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தார் உதயநிதி ஸ்டாலின். சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் படித்து முடித்தார்  உதயநிதி ஸ்டாலின்.  2002-ஆம் கிருத்திகாவை திருமணம் செய்தார். இவருக்கு இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற மகளும் உள்ளனர்.


ஆரம்பம்நாட்களில் படத்தயாரிப்பில் ஈடுப்பட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் 2018-ஆம் ஆண்டு முதல் அரசியல் களத்தில் குதித்து தீவிர அரசியலில் ஈடுப்பட்டார். 2019 ஆம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார் உதயநிதி. பின் அதே ஆண்டு ஜூலை 7ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இதனை தொடர்ந்து 2021 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தான் முதல்முறையாக எய்ம்ஸ் செங்கலை வைத்து பிரச்சாரம் செய்தது பெரிய அளவில் பிரபலம் ஆனது. 


பின் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரானார். இதனை தொடர்ந்து அரசியல் மற்றும் திரைப்படங்கள் இரண்டிலும் பணி செய்த உதயநிதி திரைப்படங்களுக்கு முழுக்குப்போட்டு முழு நேர அரசியல்வாதியானர். இறுதியாக 2023-ஆம் மாமன்னன் திரைப்படத்தோடு தனது திரைப்பயணத்தை முடித்துக்கொண்டார் உதயநிதி. 

கடந்து ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா ஆகியவற்றோடு சனாதன தர்மத்தை ஒப்பிட்டும் அவர் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஆனது.


இதனை தொடர்ந்து நடந்து முடிந்த  நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தார் உதயநிதி. இந்த தேர்தலில் நீட்-க்கு எதிராக முட்டை வைத்து பிரச்சாரம் செய்தது பெரியளவில் பேசப்பட்டது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி 40/40 இடங்களில் இமாலய வெற்றி பெற்றது. 

உதயநிதி பிரச்சார யுக்தி, அரசியல் செய்யும் விதம் இவை அனைத்தும் அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும்  என்ற கோரிக்கை மெல்ல எழ தொடங்கியது.ஆரம்பத்தில் மறைமுகமான தகவல்கள் வெளியான நிலையில் பின்னர் திமுக நிர்வாகிகள் அமைச்சர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் அமைச்சர் உதயநிதி  விரைவில் துணை முதல்வராக் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பொது  வெளியில் பேச ஆரம்பித்தனர். 

இந்த நிலையில் அமைச்சரவை மற்றும் புதிய அமைச்சர்கள்  குறித்த முதவரின் பரிந்துரை கடிதமானது ஆளுநரின் ஓப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் ஆர்.என். ரவி நேற்று ஒப்புதல் அளித்தார். அந்த கடிதத்தில் அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்க முதல்வரின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 

இதற்கு முன்பாக தமிழ்நாட்டில் இரண்டு துணை முதல்வர்களே இருந்துள்ளனர். 2009  ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது மகன் மு.க ஸ்டாலினை  துணை முதல்வராக அறிவித்தார். அதன் பிறகு கடந்த அதிமுக ஆட்சியல் ஓபிஎஸ் துணை முதல்வராக இருந்தார். தற்போது தமிழ்நாட்டின் மூன்றாவது துணை முதல்வராக  உதயநிதி ஸ்டாலின் பொறுப்பெற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram