Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’ திருமா கொடுத்த WARNING

Continues below advertisement

தமிழ்நாட்டின் 2வது பெரிய அரசியல் சக்தியாக விஜய் உருவெடுக்க வாய்ப்பு உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள கருத்து அரசியல் களத்தில் அடுத்த அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, மது ஒழிப்பு மாநாடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் பேசிய கருத்துகள் சர்ச்சைகளுக்கு வித்திட்டன. பின்னர், அந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லையென்றால் வட மாவட்டங்களில் திமுகவின் வெற்றி சாத்தியப்பட்டிருக்காது எனவும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் என்ன தவறு என்றும் பேசியது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் விஜய், தமிழ்நாட்டின் 2வது சக்தியாக வர வாய்ப்பிருக்கிறது என திருமாவளவன் பேசியுள்ளது தற்போது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

தமிழ்நாட்டில் 2வது இடத்தை பிடிக்க பாஜக கடும் முயற்சி செய்து வருகிறது. ஆனால், 2026ல் மீண்டும் திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்துவிட்டால், தமிழ்நாட்டில் பாஜக என்ற கட்சி ஒன்றுமே செய்ய முடியாது என்று பேசியுள்ள திருமாவளவன், அதற்கு அடுத்து, விஜய் தமிழ்நாட்டின் 2வது சக்தியாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார். 

தற்போது திமுகவுடனான கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என்று திருமா சொல்லி வந்தாலும் அவர் 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. விஜய்க்கு இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் நிலையில், அவருடன் 2026ல் கூட்டணி வைத்து தன்னுடைய முழக்கமான, ”ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்ற கொள்கையை சாத்தியமாக்க திருமா திட்டமிட்டு வருவதாகவும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் தன்னுடன் – தான் கூட்டணி சேருவார் என்று தொடக்கம் முதலே சீமான் பேசிவந்த நிலையில், தற்போது திருமாவளவன் விஜய்க்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதன்மூலம், திமுக கூட்டணியில் 2026ல் அவர் கேட்கும் தொகுதிகள் கிடைக்கவில்லையெனில் அவர் விஜய் பக்கம் செல்வதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram