Udhayanidhi on Tamilisai | ”அக்கா..கிரிவலம் நான் போனேனா?”தமிழிசைக்கு உதயநிதி பதிலடி

Continues below advertisement

முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது!அக்கா அவர்களே, திருவண்ணாமலையில் ’கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ’சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல ‘சரி’ வலம்!என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழிசை சவுதராஜனுக்கு  பதிலடி கொடுத்துள்ளார்.

கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடு என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதற்கு தமிழிசை சவுந்தரராஜன் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் தமிழிசை செய்தியாளர் சந்திப்பின் போது தம்பி உதயநிதி அவங்க அப்பாக்கு ஏதோ ஒன்னு சொன்ன உடனே அவர் பொங்கி பொங்கி வருகிறார். உதயநிதி கிட்ட இருக்க நெகட்டிவ் மட்டும் நம்ம சொல்ல வேணாம்...தம்பி உதயநிதி நேற்று கிரிவலம் போயிருக்கிறார். தேடி தேடி கிரிவலம் சுற்றி இருக்கிறார். பவன் கல்யான் சொன்னது தம்பி உதயநிதியின் மனதை தைத்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். அதனால அதிகப்படியான மக்கள் வருகின்ற அந்த கிரிவலத்திற்கு ஏற்பாடுகளை செய்தது எனக்கு மகிழ்ச்சி. 50 லட்சம் பேருக்கு மேல் வருவார்கள் அவர்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என போன முறை கிரிவலத்தை மக்கள் பஸ் கிடைக்காமல் அவதி உற்றார்கள். அதனால் இன்று தவறுகளை திருத்திக்கொண்டு அவர் கிரிவலம் போக ஆரம்பித்திருக்கிறார் என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சி தான் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உதயநிதி தனது எக்ஸ் வளைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது... இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது! அக்கா அவர்களே, திருவண்ணாமலையில் ’கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ’சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல  – ‘சரி’ வலம்!

ஓடாதத் தேரை ஓட வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்! ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணிச் செய்தவர் எங்கள் முதல்வர்!‘எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும். நியாயம் தானே...!

நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது.ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் - அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்! #StopHindiImposition

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram