Su Venkatesan vs Minister | MP சு.வெ vs அமைச்சர் மூர்த்திமுற்றும் வார்த்தைப்போர்!பற்றி எரியும் மதுரை
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - திமுக கூட்டணியில் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், யாரை நம்பியும் நாங்க இல்ல என அமைச்சர் மூர்த்தி வெளிப்படையாக சவால் விடுத்துள்ளது புகைச்சலை மேலும் கூட்டியுள்ளது.
மதுரை எம்பி சு வெங்கடேசன் மற்றும் அமைச்சர் மூர்த்தி இடையே வெகு நாட்களாகவே பனிப்போர் நிலவி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கும் முன்பே மதுரையை இந்த முறை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என மூர்த்தி பேசி வந்தார். ஆனால் இம்முறையும் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்கே ஒதுக்கப்பட்டு சு வெங்கடேசன் மீண்டும் எம்பி ஆனார்.
இந்நிலையில் செப்டம்பர் 9ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஒத்தக்கடை பகுதியில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் எம்.பி.சு.வெங்கடேசனும் கலந்துகொண்டார்.
பின்னர் கடந்த 7ஆம் தேதியன்று மதுரை மாநகராட்சி பகுதிகளுக்குள் பல ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரமாண்ட பேரணி எம்.பி.சு.வெங்கடேசன் தலைமையில் நடந்தது.
அப்போது பேசியபோது 10ஆயிரம் பேருக்கு பட்டா கொடுத்தாங்க ஆனால் மாநகராட்சி பகுதியில் உள்ள ஏழைகளுக்கு பட்டா கொடுக்காம அரசாணை வெளியிடாம இருக்கங்கனு என திமுக அரசை சாடினார் சு வெங்கடேசன்.
பட்டா கேட்டு நடத்திய இந்த பேரணியானது பட்டா வழங்கும் நிகழ்ச்சியை நடத்திய அமைச்சருக்கு எதிராக உள்ளதோ என நினைத்து மதுரை திமுகவினரும், அமைச்சரின் ஆதரவாளர்களும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியினருக்கு எதிரான கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டுவந்தனர்.
இதனையடுத்து அமைச்சர் மூர்த்தியின் தொகுதியான கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வண்டியூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சி் சார்பில் வண்டியூர் கிளை மாநாடு நடைபெற்றது. அதில் வண்டியூர் பகுதிகளில் சாலைகள் மோசமாக இருப்பதால் அதனை சீரமைக்க வேண்டும், ரேசன் கடைகளில் பொருட்கள் தரமற்றதாகவும் ,எடை குறைவாக இருப்பதாகவும் கூறி கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றி அதனை வண்டியூர் பகுதியில் பேனராகவும் வைத்தனர்.
இதில் கடும் கோபமடைந்த அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளர்கள் அவரிடம் குமுறி எழுந்ததாக கூறப்படுகிறது, அதன் எதிரொலியாக ஓரிரு நாட்களிலயே கம்யூனி்ஸ்ட் கட்சி் சார்பில் வண்டியூர் பகுதி முழுவதும் கண்டா வரச் சொல்லுங்க...! என்ற வாசகத்துடன் மதுரை எம்.பி.சு.வெங்கடேசனுக்கு எதிராக பொதுமக்கள் என்ற பெயரில் நோட்டீஸ்கள் ஒட்டபட்டது.
இதைத்தொடர்ந்து மாநாடு ஒன்றில் பேசிய எம்பி சு வெங்கடேசன் நாங்க இங்கதான் இருக்கிறோம் வண்டியூரில் தான் இருக்கோம் உன் ரேஷன் தட்டோடு ரேஷன் கடைக்கு வந்து சேரு, யாருக்கு கோபம் வருதோ அவன் தான் தப்பு செய்றவன்பின்னாலிருந்து ஊர் பொதுமக்கள் என்ற பெயரில் போஸ்டர் ஒட்டி எங்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து நீங்கள் அசிங்கப்பட்டு கொள்ளாதீர்கள் என்று திமுகவை கடுமையாக சாடி பேசினார்.
இந்நிலையில் தற்போது அமைச்சர் மூர்த்தி சு வெ வுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.iஇதுகுறித்து பேசிய அவர், ‘’புகழுக்காக தகுதி இல்லாதவர்களுக்கு பட்டா வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம்’’
முதலமைச்சர் கூறியது போல யாரையும் நம்பி நாங்கள் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் மூர்த்தி.
2026 தேர்தல் நெருங்கும் நிலையில் தென் மாநிலத்தின் முக்கிய பகுதியாக பார்க்கப்படும் மதுரையில் திமுக கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது திமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.