விஜய் போட்டோவை மிதித்த தவெகவினர் களேபரமான பொதுக்கூட்டம் பாதியிலேயே கிளம்பிய புஸ்ஸி | Bussy Anand | Vijay | TN Politics
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கலந்துக்கொண்ட கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பதாகைகளுடம் போராட்டத்தில் ஈடுபட்ட தவெக கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆணந்த் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் உரையாற்றிய பொதுச்செயலாளர் ஆனந்த் இறுதியாக பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மேல்மலையனூர் ஒன்றிய துணை செயலாளராக இருந்த சரண்ராஜ் தன்னுடைய பதவி பறிக்கப்பட்டதற்கு நீதிவேண்டும் என கேட்டு "கழகமே நீதிவேண்டும், குறைகளை கேட்க வேண்டும், செஞ்சி தொகுதி நிர்வாகிகளின் பிரச்சினையை கேள்" என்ற வாசகம் அடங்கிய பாதகைகள் மற்றும் பேனர்களுடன் முழக்கமிட்டனர்.
அப்போது அங்கிருந்த மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் திருமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள், சரண்ராஜ் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை தடுத்து பதாகைகள் மற்றும் பேனர்களை பிடிங்கி எரிந்தனர். அபோது விஜய் படத்துடன் இருந்த அந்த பதாகையை தவெக தொண்டர்கள் சிலர் காலால் மிதித்து தங்கள் எதிர்ப்பை காண்பித்தனர். இதனால் இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் நலத்திட்ட உதவிகளை முழுமையாக கொடுக்கமால் பொதுச்செயலாளர் ஆனந்த் பாதியிலேயே புறப்பட்டு சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தவெக தொடங்கி ஓராண்டே ஆன நிலையில் அக்கட்சியில் உட்கட்சி பூசல் வெளிப்படையான மோதலாக மாறியுள்ளது.