TVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்

Continues below advertisement

நம்ம கட்சிக்குள்ளேயே கருப்பு ஆடு இருக்கு, அவர்கள் மீது கண்டிப்பா ஆக்சன் இருக்கும் என்று தவெக செயற்குழு கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நிர்வாகிகளுக்கு நேரடியாக வார்னிங் கொடுத்து அதிரடி காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் கடந்த ஞாயிறன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் தவெகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தவெகவின் 26 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக ஆளும் திமுக அரசு மத்திய அரசை காரணம் காட்டி சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இருப்பது, சமூக நீதியின் பாதையில் செல்கிறோம் என்று இந்த அரசு கூறுவதை இனியும் தமிழக மக்கள் நமப்மாட்டார்கள், அதனால் உடனடியான சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று அந்த கூட்டத்தில் பேசப்பட்டது. 

இதுமட்டுமில்லாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர்  விளைநிலங்கள், நீர் நிலைகளை அழித்து உருவாக்கும் பரந்தூர் விமானநி லையத்தினால் விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களை பாதுக்காக்கும் பொருட்டு மத்திய மாநில அரசுகள் இந்த திட்டத்தை  கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 

இந்த நிலையில் கூட்டத்தில் நிர்வாகிகள் சிலரை தவெக தலைவர் விஜய் லெப்ட் ஆண்ட் ரைட் வாங்கியுள்ளார். கட்சியில் முடிவுகளை சிலர் அடிக்கடி வெளியே லீக் செய்கின்றனர். நமக்கு எதிராக இருக்கும் கட்சியின் முன்னாள் நிர்வாகிகளாக இருந்த இவர்கள் பல தகவலை லீக் செய்து விடுகின்றனர். ஏன் நமது தீர்மானம் கூட கசிந்து விடுகிறது. இனிமேலும் இதை அனுமதிக்க முடியாது. கட்சியில் பல நிர்வாகிகளை மாற்றும் காலம் வந்து விட்டது என்றும் அனுபவம் வாய்ந்த மாவட்ட செயலாளர்கள் தேவைப்படுகிறார்கள். அப்போது தான் கட்சியை தேர்தலுக்கு தயார்ப்படுத்த முடியும் என்று விஜய் அந்த செயற்குழு கூட்டத்தில் கண்டிப்பாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது. 

விஜய்யின் இந்த கண்டிப்பான பேச்சால் தவெகவின் பல மாநில செயலாளர்கள் தற்போது கலக்கத்தில் உள்ளனர்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram