Vijay Madurai | NO ONE CAN STOP ME தொகுதியை டிக் செய்த விஜய்?உற்சாகத்தில் த.வெ.க

Continues below advertisement

மதுரை வடக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்பாளராக போட்டியிடுகிறார் என தவெக நிர்வாகிகள் ஒட்டிய சுவரொட்டிகளால் விஜயின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.மதுரை வடக்கு தொகுதியில் தளபதிக்கு எதிராக களமிறங்கிறார் இளைய தளபதி என தவெகவினர் சிலாகித்து வருகின்றனர்.

அரசியல் கட்சிகளின் தலைநகரமாக உள்ள மதுரையில் முதன்முறையாக நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென சுவரொட்டிகள் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது . இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என அரசியல் கட்சியை அறிவித்து இந்த மாதம் 27ஆம் தேதி அரசியல் கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தவுள்ளார் 

மேலும் வரும் 2026 ஆம் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் முதல் தேர்தலை சந்திக்க உள்ளதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தாவெக தலைவர் நடிகர் விஜய் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி,  தூத்துக்குடி தொகுதி,  சென்னை ஆர் கே நகர் தொகுதி ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடுவார் என தகவல் வெளியானது. இதனிடையே  அரசியல் கட்சி பயிலரங்கம் நடைபெற்று வரும் நிலையில் மாநாட்டிற்கான பணிகளும் நடைபெற்றுவருகிறது. 

இந்நிலையில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக கூறி மதுரை வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சார்பில்  2026ன் மதுரை வடக்கு தொகுதியின் வெற்றி வேட்பாளர் கழக தலைவர் விஜய் என்ற வாசகங்களுடன் மதுரை வடக்கு சட்டமன்றதொகுதிக்கு உட்பட்ட பகுதிக்குள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த சுவரொட்டிகளை பார்க்கக்கூடிய தமிழக வெற்றி கழகத்தினரும் உற்சாகமடைந்துள்ளனர். மதுரை வடக்கு தொகுதியில் திமுக எம்எல்ஏ தளபதியை எதிர்த்து இளையதளபதி போட்டியிடவுள்ளார் என தவெகவினர்  சிலாகித்து வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram