TVK Vijay: ”விஜயின் NEXT மூவ்” உளவுத்துறை சீக்ரெட் Report! அதிர்ச்சியில் திராவிட கட்சிகள்
தவெக தலைவர் விஜய்-க்கு நாளுக்கு நாள் கூடும் கூட்டத்தை பார்த்து திராவிட கட்சிகள் கடும் அப்செட்டில் இருப்பதாக சொல்கின்றனர். ஆளும் திமுக உளவுத்துறையிடம் அவருக்கு எப்படி இவ்வளவு கூட்டம் கூடுகிறது, இதெல்லாம் வாக்குகளாக மாறுமா? என்பது தொடர்பான ரிப்போர்ட்டை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளை இப்போதே கட்சிகள் தொடங்கிவிட்டன. அந்த வகையில், திமுக இப்போது இருக்கும் கூட்டணியிலேயே சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. அதேபோல், பாஜக உடன் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை சந்திக்க தயாராகியுள்ளது.
நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள சூழலில், தவெக கூட்டணி அமைத்து போட்டியிட போகிறதா? இல்லை தனித்து போட்டியிட போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே , நிர்வாக ரீதியாலன 120 மாவட்டச் செயலாளர்களை நியமித்தது பூத் கமிட்டி மாநாடு நடத்தியது என்று கள அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளார் விஜய்.
அந்தவகையில், தங்களது முதல் பூத் ஏஜண்ட் மாநாட்டை கோவையில் நடத்தினார். அப்போது கோவை விமான நிலையத்தில் இருந்து பூத் ஏஜண்ட் மாநாடு நடைபெறும் இடம் வரை ரோடு ஷோ நடத்தினார். அப்போது கூடிய கூட்டத்தை விஜயே எதிர்பார்க்கவில்லை என்று தவெக தரப்பில் இருந்தே கூறப்பட்டது. அடுத்து சில நாட்களில் அவர் நடத்தி வரும் ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான ஷூட்டிங் செல்வதற்காக மதுரை வந்தார்.
அப்போதும் இதைப்போல் கூட்டம் கூடவே அதையும் ரோட் ஷோ வாக மாற்றினார் விஜய். இப்படி கடந்த சில நாட்களுக்குள்ளேயே விஜய் சென்ற இந்த இரண்டு இடங்களிலும் கூடிய கூட்டம் என்பது ஆளும் திமுக மட்டுமில்லாமல் 2026-ல் ஆட்சியை பிடிப்போம் என்ற முனைப்பில் இருக்கும் அதிமுகவிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்கின்றனர்.
விஜய்க்கு எப்படி இவ்வளவு கூட்டம் கூடுகிறது, இந்த கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறுமா? இல்லை சினிமா பிரபலம் என்பதால் இப்படி மக்கள் கூட்டம் கூடுகிறாதா என்று உளவுத்துறையிடம் இது தொடர்பான சீக்ரெட் ரிப்போர்ட்டையும் திமுக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், விஜயின் அடுத்தடுத்த மூவ் என்ன என்பது தொடர்பான ரிப்போர்ட்டையும் ஆளும் திமுக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.