Congress vs dmk : வார்த்தையை விட்ட காங்கிரஸ்! ஸ்டாலின் செய்த சம்பவம்! சீனுக்கு வந்த ராகுல்

Continues below advertisement

கடந்த சில நாட்களாக முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துகள் சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வரும் சூழலில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி,”முஸ்லீம்கள் மீது வெறுப்பை பரப்பாதீர்கள் நாங்கள் அமைதியையே விரும்புகிறோம்”என்று உருக்கமாக கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இறந்த 26 பேரில் திருமணம் ஆகி சில நாட்களே ஆன 26 வயதான வினய் நர்வால் என்ற கடற்படை வீரரும் ஒருவர்.வினய் நர்வாலுக்கு கடந்த மாதம்16-ம் தேதி திருமணமும், 19-ம் தேதி திருமண வரவேற்பும் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு மனைவியுடன் ஹனிமூன் திட்டத்தில் ஜம்மு காஷ்மீர் சென்றிருக்கிறார். அப்போது தான் பயங்கரவாதிகள் தாக்குதலில்  பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகுந்த சோகத்தை ஏற்ப்படுத்தியது.

இந்த நிலையில் தான் வினய் நர்வாலின் 27-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஹரியானாவின் கர்னாலில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கர்னாலின் பாஜக எம்எல்ஏ ஜக்மோகன் ஆனந்தும் கலந்துகொண்டார். இச்சூழலில், இறந்த கடற்படை வீரர் வினய் நார்வாலின் மனைவி வேண்டுகோள் ஒன்றினை வைத்துள்ளார். 

இது  தொடர்பாக அவர் பேசுகையில், ” யாரிடமும் வெறுப்போ, பகையோ காட்டக்கூடாது. ஆனால் அது தான் நடக்கிறது. முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீரிகளுக்கு எதிராக மக்கள் செயல்படுகின்றனர்.எங்களுக்கு அது வேண்டாம். எங்களுக்கு அமைதி வேண்டும். அமைது மட்டுமே வேண்டும்.அதேபோல எனது கணவரின் மரணத்திற்கு நீதி வேண்டும்.தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” என்று கூறியுள்ளார். இது  தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola