TVK Vijay vs BJP | பாஜகவிடம் பணிந்த விஜய்? ஆயுத பூஜைக்கு வாழ்த்து! காரசார விவாதம்

Continues below advertisement

விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லாததை பாஜக கடுமையாக விமர்சித்த நிலையில், ஆயுத பூஜைக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் பணிந்துவிட்டாரா என்ற காரசாரமான விவாதம் சமூக வளைத்தளங்களில் எழுந்துள்ளது..

அண்மையில் தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜய், முதல் மாநாட்டிற்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் கட்சி அறிவிப்பை வெளியிட்ட போது விஜய் சொன்ன ஒரு வார்த்தை “பிறப்பால் அனைவரும் சமம்” என்றார். ஆனால் பக்ரீத், ஓனம் ஆகிய பண்டிகைகளுக்கு தன்னுடைய வாழ்த்தை பதிவு செய்த விஜய், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வாழ்த்து சொல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது..

இதை கையில் எடுத்த பாஜக, விநாயகர் சதுர்த்தியை விஜய் புறகணிப்பது ஏன்? அனைத்தையும் சமமாக பார்த்தால், இந்துக்கள் பண்டிக்கைக்கும் விஜய் வாழ்த்து சொல்லி இருக்க வேண்டுமே என்று கடுமையாக விமர்சித்தன. குறிப்பாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன், வினோஜ் பி செல்வம் என பலர் விஜய்யின் இந்த நடவடிக்கையை கண்டித்தனர்.

இந்நிலையில் “தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயண்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திருநாள்களில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயர்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

நடிகராக இருக்கும் போது எந்த ஒரு சார்பு நிலை பாடை வேண்டுமானாலும் எடுக்கலாம், ஆனால் அரசியல் கட்சியாக உருவெடுக்கும் போது, அனைவரின் ஆதரவும் இருந்தால் மட்டுமே இங்கு ஜெயிக்க முடியும் என்பதால் விஜய் ரூட்டை மாற்றியுள்ளதாக இந்த நிகழ்வு பார்க்கபடுகிறது..

இந்நிலையில் பாஜகவின் அழுதத்திற்கு நடிகர் விஜய் பணிந்துவிட்டாரா என்ற காரசாரமான விவாதம் சமூக வளைத்தளங்கலில் எழுந்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram