கட்டு கட்டா பணம் வச்சிருக்கா லஞ்சம் வாங்கிய மனைவி! போட்டுக் கொடுத்த கணவன்!
என் மனைவி தினமும் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி அதனை வீட்டில் பதுக்கி வைக்கிறார் என்று அவரது கணவரே ஆதாரத்தோடு வீடியோ வெளியிட்டு மாட்டி விட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
திவ்ய ஜோதி என்பவர் முன்னாள் துணை நிர்வாக நிர்வாக பணியாற்றி வந்துள்ளார். அவர் சமீபத்தில் பெருநகர ஹைதராபாத் மாநகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து லஞ்சம் வாங்கி வருவதாக அவரது கணவர் ஸ்ரீபட் பகீர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது மனைவி தினமும் கட்டுக்கட்டாக லஞ்சம் வாங்கி அதனை வீட்டில் மறைத்து வைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். அந்தப் பணத்தை வைத்து தனியாக வீடு, கார் என்று வாங்கி சொத்துகளை குவித்து வருவதாகவும், நான் லஞ்சம் வாங்க கூடாது என்று சொன்னாலும் அதை காதில் வாங்கி கொள்வதே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வீட்டில் மூலை, முடுக்குகளில் எல்லாம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சுமார் 30 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து காண்பிக்கும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. லஞ்சம் வாங்கும் காரணத்திற்காகவே தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். திவ்ய ஜோதி மீது ஏற்கனவே ஊழல் புகார் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் அவரது கணவரே லஞ்சம் வாங்கிய பணம் என்று காட்டி வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.